கதை கேட்ட விஜய்… முடியாது என மறுத்த லோகேஷ் கனகராஜ்.. இந்த விஷயம் தெரியாம போச்சே…
Vijay: தமிழ் சினிமாவின் சென்ஷேசன் இயக்குனராக இருந்த லோகேஷ் கனகராஜிடம் விஜய் கதை கேட்க அவர் முடியாது என கூறிய சம்பவத்தை தற்போது தெரிவித்து இருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமாவுக்கு மிகவும் பிடித்த இயக்குனராகி இருக்கிறார். ஹாலிவுட் பார்த்து பழக்கப்பட்ட தமிழ் சினிமா ரசிகர்களுக்கு லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்னும் எல்சியூ கான்செப்ட் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது.
அந்த வகையில் அவர் முன்னணி நடிகர்களை தொடர்ந்து இயக்கி வருகிறார். விஜய், கமல்ஹாசன், ரஜினிகாந்த் என அவர் பட்டியல் நீண்டுக்கொண்டே செல்கிறது. அதிலும் நடிகர் விஜயுடன் இரண்டு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
ஆனால் முதலில் விஜயிற்கு கதை இல்லை என்றே லோகேஷ் தெரிவித்தாராம். அதுகுறித்து தற்போது ஒரு பேட்டியில் அவர் பேசி இருக்கும்போது, மாநகரம் படம் வெளியான சமயத்திலேயே அதை பார்த்துவிட்டு விஜய் சார் எனக்கு கால் செய்து வாழ்த்தினார்.
கதை சொல்லவும் அழைத்து இருந்தனர். ஆனால் அப்போது என்னிடம் எந்த கதையுமே இல்லை. அதனால் அவரை போய் பார்த்து கதை இல்லை எனக் கூறிவிட்டே வந்தேன். மன்சூர் அலிகானுக்காக எழுதப்பட்டது கைதி கதை. அப்படத்துக்கு முன்னணி நடிகர்கள் ஓகே சொல்வார்களா என்றே தோணவில்லை.
அப்படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது மீண்டும் வாய்ப்பு வந்தது. அப்போது மாஸ்டர் படத்தின் ஒன்லைன் இருந்தது. கைதி படத்தின் ஷூட்டிங் முடிய மூன்று மாதம் டைம் இருந்தத். அந்த டைமை பயன்படுத்தி கொண்டு ஸ்கிரிப்ட் எழுதியே அந்த வாய்ப்பு கிடைத்தது.
கைதி படத்தின் கடைசிக்கட்ட பணிகளை ஒரு பக்கம் பார்த்துக்கொண்டே மாஸ்டர் படத்தின் ஷூட்டிங்கையும் செய்தேன். அதில் சில காட்சிகள் நான் நினைத்த போல அமைந்தது. சில அதில் செட்டாகாமல் போனதாகவும் தெரிவித்து இருக்கிறார்.