அட்வான்ஸ் வாங்கியாச்சி.. 5 வருஷத்துக்கு இரத்தக்களறிதான்!.. லோகேஷ் செய்யப்போகும் சம்பவம்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:56  )

கடந்த 2023 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி அடைந்த திரைப்படம் லியோ. உலக அளவில் பல நூறு கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. மாநகரம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக விஜய் உடன் இணைந்தார்.

ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான மாஸ்டர் திரைப்படமும் பெரிய அளவில் வசூல் சாதனை பெற்றது. அதற்கு முன் உலக நாயகன் கமல்ஹாசனை வைத்து விக்ரம் என்ற ஒரு மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்த லோகேஷ் கனகராஜ் அவருடைய படங்களின் மூலம் லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸ் என்ற டெக்னிக்கை பயன்படுத்தி ஒவ்வொரு படங்களையும் தொடர்பு படுத்தி வந்தார்.

எல் சி யு என அழைக்கப்படும் இந்த டெக்னிக் லோகேஷின் ஒவ்வொரு படங்களிலும் இருக்கும். ஆனால் இப்போது ரஜினியை வைத்து அவர் எடுக்கும் கூலி திரைப்படத்தில் எல்சியூ கான்செப்ட் இருக்காது என்றே பலரும் கூறி வருகிறார்கள்.

ஏனெனில் ரஜினி படம் என்றால் அது அவருடைய படமாகத்தான் இருக்க வேண்டுமே தவிர மற்ற படங்களின் இன்ஃப்ளுயன்ஸ் தன்னுடைய படத்தில் இருக்கக் கூடாது என விரும்புவார் ரஜினி என்ற ஒரு கருத்தும் இருந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் படங்களை பொருத்தவரைக்கும் ரத்தம் கொடூரம் கத்தி துப்பாக்கி இவைகள் தான் அதிகமாக இருக்கும். அதையும் தாண்டி டிரக்ஸ் பற்றிய விஷயங்கள் அவருடைய படங்களில் தொடர்ந்து இருப்பதையும் பார்க்க முடிகிறது. சமீபத்திய ஒரு நேர்காணலில் லோகேஷ் கனகராஜிடம் இதைப் பற்றி பல கேள்விகள் எழுப்பப்பட்டது.

அதாவது ரத்தம் கத்தி துப்பாக்கி இவைகள் இல்லாமல் ஒரு உண்மையான காதல் சார்ந்த படங்களை உங்களால் கொடுக்க முடியாதா என்ற ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் கனகராஜ் ஒரு 5 வருஷத்துக்கு இல்ல. அட்வான்ஸ் வாங்கிட்டேன். அவ்வளவுதான். கைதி ஆரம்பிக்கும் போது இப்படி ஆகும் என நான் நினைக்கவே இல்லை.

அன்றைய தேதியில் இத்தனை ஆயிரம் கோடி டிரக்ஸ் புழக்கத்தில் இருக்கிறதா என்றால் இருந்திருக்கு. சமீப காலமாக அதை எல்லாம் ஒப்புக்கொள்கிறார்கள். ஆயிரம் கோடி 2000 கோடி அளவில் டிரக்ஸ் புழக்கத்தில் இருப்பதாக பல செய்திகள் இப்போது வெளிவருகின்றன.

ஆனால் அன்றைய தேதியில் ரிசர்ச் பண்ணும் போது இருந்தது. கட்டாயத்தின் பேரில் ஒன்னு ஆரம்பிச்சிட்டோம். அத முழுமையாக முடிக்கணும். அதுதான் அந்த யுனிவர்சுக்கும் மரியாதை. அதனால் 5 வருஷத்துக்கு அந்த மாதிரி படங்கள் தான் வெளியாகும் என லோகேஷ் கூறியிருக்கிறார்.

Next Story