நாலு இயக்குனர்கள் இருக்கிறார்கள்!.. வேற மாதிரி!.. உண்மையை போட்டு உடைத்த இளையராஜா!...

by ராம் சுதன் |   ( Updated:2024-07-17 18:16:34  )
ilayaraja
X

அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இளையராஜா. அன்னக்கிளி படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க ரசிகர்களிடம் பிரபலமானார். அப்போது துவங்கிய ராஜாவின் இசை இப்போது வரை காற்றில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.

80களில் தமிழ் சினிமாவை காப்பாற்றும் கடவுளாக இளையராஜா இருந்தார். அவர் இசை இல்லை எனில் படம் ஓடாது என்றே பல நடிகர்கள், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நினைத்தார்கள். பாடல்கள் மட்டுமின்றி படத்தின் காட்சிகளுக்கு சிறப்பான பின்னணி இசை மூலமும் அழகு சேர்த்தார் இளையராஜா.

90களில் ஏ.ஆர்.ரஹ்மான், தேவா ஆகியோர் வந்தபின் இளையராஜா இசையமைக்கும் படங்களின் எண்ணிக்கை குறைந்து போனது. ஆனாலும், தொடர்ந்து இனிமையான பாடல்களை கொடுத்து வருகிறார். வெற்றிமாறனின் இயக்கத்தில் கடந்த வருடம் வெளியான விடுதலை படத்தில் இடம் பெற்ற ‘வழிநெடுக காட்டு மல்லி’ பாடல் ரசிகர்களை தாலாட்டியது.

விரைவில் விடுதலை 2 படம் வெளியாகவிருக்கிறது. சினிமாவை பொறுத்தவரை இளையராஜாவிடம் தங்களுக்கு தேவையான மெட்டுக்களை வாங்குவதில் இயக்குனர்கள் பல வழிகளை கடைபிடிப்பார்கள். சிலர் பாடல் வரும் சூழ்நிலைகளை சொல்லி அதற்கு ஏற்ப மெட்டு கேட்பார்கள்.

சிலர் ஹிந்தி மற்றும் மற்ற மொழிகளில் ஏற்கனவே ஹிட் ஆன பாடல்களை மேற்கோள் காட்டி அந்த பாடல் போல வேண்டும் என கேட்பார்கள். சில இயக்குனர்கள் இளையராஜாவின் இசையில் ஏற்கனவே வெளியாகி ஹிட் அடித்த பாடல்களை சொல்லி அது போல ஒரு பாட்டு வேண்டும் என்பார்கள்.

இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் நடந்த இசை நிகழ்ச்சியில் பேசிய இளையராஜா ‘தமிழ் சினிமாவில் 4 இயக்குனர்கள் இருக்கிறார்கள். மணிரத்னம், பாலுமகேந்திரா, பாரதிராஜா, மகேந்திரன். இவர்கள் நான்கு பேரும் படத்தில் எந்த சூழ்நிலையில் பாடல் வருகிறது. கதாபாத்திரத்தின் தன்மை ஆகியவற்றை சொல்வார்கள். அதன்பின் நான் கொடுக்கும் மெட்டுக்களில் அவர்களுக்கு பிடித்ததை தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் எப்போதும் மற்ற பாடல்களை சொல்லி அது போல பாடல் வேண்டும் என என்னிடம் கேட்டதே இல்லை’ என சொன்னார்.

Next Story