தனுஷோட இட்லி கடையில நித்யாவுக்கு அவ்ளோ சௌகரியம்... ஆனா சேலஞ்சிங் கேரக்டராமே..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:01  )

திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷூக்கு ஜோடியாக செமயாக நடித்து தேசிய விருதைப் பெற்றுவிட்டார் நித்யா மேனன். மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார் அவரோட இட்லி கடையில். படத்துப் பேரு தாங்க அது. தனுஷே தயாரித்து இயக்கி நடிக்கிறார்.

படத்துல நடிச்ச அனுபவம் குறித்து நித்யாமேனன் என்ன சொல்றாருன்னு பாருங்க. தனுஷ் இட்லி கடை என்னும் படத்தை இயக்குகிறார். நான் அந்தப் படத்திற்காக சில நாள்கள் சூட்டிங் போனேன்.

திருச்சிற்றம்பலம் படத்திற்காக கம்ஃபோர்ட் சோனில் இருந்து வந்து நடித்தேன் என்றால் இட்லி கடை படத்திற்காக டபுள் மடங்கு கம்போர்ட் சோனில் இருந்து வந்திருக்கிறேன். தனுஷ் மீண்டும் இதுவரை யாரும் என்னை சித்தரிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்;திருக்கிறார். அவர் எப்போதும் எனக்கு சவாலான விஷயங்களைத் தான் தருகிறார் என்று தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தான் முழு படப்பிடிப்பும் நடந்துள்ளது. இந்தப் படத்திற்காக தனுஷ் உண்மையான இட்லிக்கடைக் காரர் போலவே இருக்கிறார். தோளில் ஒரு துண்டைப் போட்டுக்கொண்டு வேட்டி உடுத்தியபடி இட்லி தட்டை எடுக்கும் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அதைப் பார்க்கும்போது ரொம்பவே யதார்த்தமாக இருக்கிறது. தனுஷ் ஏற்கனவே ப.பாண்டி படத்தை இயக்கி முத்திரைப் பதித்தார். ராயன் படமும் அந்த வகையில் பிரமாதமாக இருந்தது.

இப்போது நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படம் சூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷனுக்கான பணிகள் நடந்து வருகிறது. இந்தப் படத்திற்கும் அவர் தான் இயக்குனர். இப்போது இட்லி கடை. ரொம்பவே பிசியாகி விட்டார் தனுஷ். இட்லி கடை படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார்.

இட்லி கடை படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். கிரண் கௌஷிக் ஒளிப்பதிவைக் கவனிக்கிறார். இது தனுஷூக்கு 52வது படம். அவர் இயக்கத்தில் நாலாவது படம்.

தனுஷ் நடிப்பு மட்டுமல்லாமல் பாடகராகவும், பாடலாசிரியராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் என படிப்படியாக காலடி எடுத்து வைத்து சினிமாவில் வேகம் வேகமாக முன்னேறி வருகிறார். அவர் தனக்கென தனி ஒரு பாதையை வகுத்துக் கொண்டு வெற்றிநடை போடுவது அவரது ரசிகர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Next Story