விஜய் நடிக்க வேண்டிய படத்தில் பார்த்திபன்...! இது எப்போ நடந்தது?

இயக்குனர் சி.ரங்கநாதன் விஜய் குறித்தும் அவருடன் பணியாற்றிய படங்கள் குறித்தும் பல தகவல்களை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் பகிர்ந்துள்ளார்.
நைட் 12 மணி வரை நடித்த விஜய்: முதல் படமே விஜயை வைத்துத் தான் இயக்கினேன். நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் எப்பவுமே 9 மணி வரைக்கும் தான் நடிப்பார். ஒருநாள் மட்டும் நைட் 12 மணி வரைக்கும் நடித்தார். அந்த வகையில் அவர் வேறு யாருக்கும் இப்படி நடித்தது இல்லை. பாடல் பதிவுகளுக்கு எல்லாம் வந்து பார்த்து விடுவார்.
கோயமுத்தூர் மாப்பிள்ளை: பாட்டெல்லாம் நினைச்சிக்கூட பார்க்கல. நல்லா வந்துருக்குன்னு சொன்னார். அவரை ஒரு பாடலைப் பாட வச்சேன். கோயமுத்தூர் மாப்பிள்ளைக்குப் பாடலையும் நானே பாடுறேன்னாரு. ஆனா உதித்நாராயணன் பாடுனா இன்னும் ரீச்சாகும்னு சொன்னேன். சரின்னுட்டாரு. விஜய் அப்போ எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிஞ்சிக்குவாரு. படம் நல்லா வந்ததும் கட்டிப்பிடிச்சிப் பாராட்டுனாரு.
உடனே அடுத்த படமா?: இந்தப் படத்துக்குப் பிறகு டாட்டா பிர்லா படத்துக்குக் கூட கதாநாயகனா அவரைத் தான் போடுவதாக இருந்தது. டைரக்டர் சொல்லிட்டாரு. இப்பத்தான் படம் பண்ணிருக்கான். உடனே அடுத்த படம் பண்ணாட்டி என்ன? ஒரு கேப் விடுன்னாரு. அவருக்கிட்ட கதை, டைட்டில் சொன்னேன். எல்லாமே அவருக்குப் பிடிச்சிருந்தது.
பார்த்திபன்: அதனால தான் அதை பண்ண முடியாமப் போச்சு. அப்புறம் வேறு யாரு பண்ணினா நல்லாருக்கும்னு கேட்டோம். பார்த்திபன் பண்ணினா நல்லாருக்கும்னாங்க. அவருக்கிட்ட போய் கதை சொன்னேன். அவருக்கும் பிடிச்சிருந்தது. அப்படித்தான் அந்தப் படம் உருவானது என்றார்.
டாடா பிர்லா: 1996ல் சி.ரங்கநாதன் இயக்கத்தில் உருவான படம் டாடா பிர்லா. பார்த்திபன், ரக்ஷனா, கவுண்டமணி, மணிவண்ணன், சச்சு, பாலு ஆனந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். சூப்பர்ஹிட் காமெடி படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.