படத்துல கதைனு ஒன்னுமில்ல! பாடலுக்காகவே 200 நாள்கள் ஓடிய அந்த திரைப்படம்..

சினிமாவின் போக்கு ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப மாறிக் கொண்டேதான் வருகின்றது. அந்தக் காலத்தில் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் வெளியாகின. சிவாஜி, எம்ஜிஆர் இவர்களின் படங்களை எடுத்துக் கொண்டால் படத்தின் ஹீரோ கதைதான். கூடுதலாக எம்ஜிஆர் படங்களில் கதையோடு நல்ல கருத்துள்ள பாடல்களையும் வைக்க சொல்வார்.

அதன்பிறகு ரஜினி, கமல் காலகட்டத்தில் கதையோடு ஆக்‌ஷனும் சேர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றன. ஆனால் இப்போதைய கால சினிமாவில் பிரம்மாண்டம் மட்டுமே இருக்கிறன தவிர கதை என்ற ஒன்று இருப்பதாக தெரியவில்லை. ரசிகர்களும் படம் பிரம்மாண்டமாக இருப்பதைத்தான் விரும்புகிறார்கள்.

ரஜினி, விஜய் போன்றவர்களின் படங்கள் ஹிட்டாகிறது என்றால் அதில் இருக்கும் பிரம்மாண்டம் தான் காரணம். உதாரணமாக ஜெயிலர் படத்தில் கதை என்பது பெருசாக இருக்காது. ஆனால் 700 கோடிக்கும் மேல் வசூலில் கல்லா கட்டியது. அதை போல லியோ படத்தையும் சொல்லலாம். படம் முழுக்க ஆக்‌ஷன், பிரம்மாண்டம் இதைத்தான் காட்டியிருப்பார்கள்.

அதையும் தாண்டி படம் இத்தனை கோடி வசூலித்திருக்கிறது என்றால் ஹீரோக்களுக்கு மார்கெட்டில் அப்படி ஒரு ஓப்பனிங் இருக்கிறதுதான் காரணம். இந்த நிலையில் படத்தில் அமைந்த பாடலுக்காகவே ஒரு படம் 200 நாள்கள் ஓடியதாக சமூக வலைதளத்தில் ஒரு செய்தி வைரலாகி வருகின்றது.

பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் ‘பருவ ராகம் என்ற படத்தில் கதையே இல்லையே? அப்படி இருக்கும் போது அந்தப் படம் 200 நாள்கள் எப்படி ஓடியது?’என்ற கேள்வியை கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘பருவ ராகம் படத்தை பொறுத்தவரைக்கும் படத்தின் இயக்குனர் வி.ரவிச்சந்திரன் படத்தின் பாடல்களை படமாக்கியவிதம் அற்புதமாக இருந்தது. பாடலில் ரவிச்சந்திரனின் நடனமும் அனைவர் மத்தியில் பாராட்டைப் பெற்றது. இதன் காரணமாகத்தான் படம் 200 நாள்கள் ஓடியது’ என பதிலளித்தார்.

1987 ஆம் ஆண்டு வெளியான பருவ ராகம் திரைப்படத்தை வி.ரவிச்சந்திரனே இயக்கி அவரே நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஜூஹி சாவ்லா நடித்திருப்பார். இவர்களுடன் சேர்ந்து ஜெய்சங்கர், பூர்ணம் விஸ்வநாதன், டெல்லி கணேஷ், தேங்காய் சீனிவாசன், தியாகு, விஷ்ணுவர்தன், சோ ராமசாமி, நீலு, பூபதி, தேவகிராணி, ஜெயசித்ரா, மனோரமா, வடிவுக்கரசி போன்ற முக்கிய பிரபலங்களும் நடித்திருந்தனர்.படத்திற்கு இசையமைத்தவர் ஹம்சலேகா.

Related Articles
Next Story
Share it