வாரிசு, தளபதி 69 வாய்ப்பெல்லாம் பிரகாஷ் ராஜுக்கு சும்மாவா கிடைச்சுது!.. விஜய்க்கு செம சப்போர்ட்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:18  )

சினிமாவை தாண்டி அரசியலில் பெரும் ஆர்வத்தை செலுத்தி வரும் நடிகர் பிரகாஷ் ராஜ் தொடர்ந்து தெலுங்கு நடிகர் மற்றும் ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாணை லட்டு விவகாரத்தில் எதிர்த்து பேசி வருகிறார்.

பிரகாஷ்ராஜுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பவன் கல்யாண் தனது கருத்துக்களை முன்வைத்து வரும் நிலையில் அரசியல் வட்டாரம் சூடாகி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுடன் அமர்ந்து கொண்டு பிரகாஷ் ராஜ் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

இந்நிலையில் தமிழ்நாடு அரசியல் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரகாஷ்ராஜ் தமிழ்நாட்டில் பாஜக இல்லாததை பெரிய விஷயம் என்றும் எதிர்க்கட்சியாக மாற்று கட்சி ஒன்று இருந்தால் மட்டுமே நாடு நன்றாக இருக்கும் கேள்விகள் எழுப்பப்படும் எனக் கூறினார்.

மேலும், தமிழ்நாட்டில் இளம் தலைமுறையினர் புதிதாக அரசியலுக்கு வரவேண்டும் திமுகவுக்கு எதிரான சக்தி ஆரோக்கியமான சக்தியாக உருவாக வேண்டும் என்று பிரகாஷ் ராஜ் பேசிய நிலையில் தளபதி விஜய்க்கு மறைமுகமாக அவர் ஆதரவு தெரிவிக்கிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் நடித்த கில்லி, வில்லு, போக்கிரி உள்ளிட்ட படங்களில் நடித்த பிரகாஷ் ராஜ் பல வருடங்கள் கழித்து மீண்டும் வாரிசு பழத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார். எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்க உள்ள கடைசி படமான தளபதி 69 படத்திலும் பிரகாஷ் ராஜ் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் தாடி பாலாஜி இணைந்துள்ள நிலையில், விஜய் மாநாட்டின் போது பல முன்னணி சினிமா பிரபலங்களும் விஜய் கட்சியில் இணைவார்கள் என்றும் அல்லது விஜய்க்கு மறைமுகமாக ஒட்டுமொத்த சினிமா துறையினரும் ஆதரவு தெரிவிப்பது உறுதி என்கின்றனர்.

Next Story