அந்த கண்றாவி படத்தை பத்தி பேச வேண்டாம்!.. கரடியே காறி துப்பிடுச்சே மொமெண்ட்!…

Published on: November 7, 2024
---Advertisement---

Actor vijay: ரசிகர்களுக்தான் சினிமா என்பது துள்ளலான அனுபவம். ஆனால், தயாரிப்பாளர்களுக்கு அது வியாபாரம்தான். அதுவும் பெரிய நடிகரை வைத்து படமெடுத்தால் பணம் கொடுக்கும் என கணக்கு போடுவார்கள். ரஜினி, விஜய், அஜித் போன்ற நடிகர்களின் கால்ஷீட் கிடைத்தால் போதும் என் இப்போதும் பல தயாரிப்பாளர்கள் காத்திருக்கிறார்கள்.

பல வருடங்களாக பெரிய நடிகர்களின் கால்ஷீட்டுக்காக காத்திருப்பார்கள். அடிக்கடி அந்த நடிகரை சந்தித்து தனக்கு கால்ஷீட் கொடுக்கும்படி கேட்பார்கள். தான் கேட்கும் சம்பளத்தை அந்த தயாரிப்பாளரால் கொடுக்க முடியும் எனில் மட்டுமே அந்த நடிகர் அவருக்கு கால்ஷீட் கொடுப்பார்.

ஆனால், அது மட்டும் போதாது. நல்ல கதையும், இயக்குனரும் அமைய வேண்டும். சில சமயம் அது தவறாக முடிந்துவிடும். ஒரு இயக்குனர் கதை சொல்லும்போது கேட்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால், படமாக திரையில் பார்க்கும்போது கற்பனை செய்தது போல இருக்காது.

விஜய்க்கும் அப்படி பல முறை நடந்திருக்கிறது. எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் விஜய் நடித்து 2010ம் வருடம் வெளியான திரைப்படம் சுறா. இந்த படத்தில் தமன்னா, வடிவேலு என பலரும் நடித்திருந்தனர். ஆனால், இந்த படத்தில் விஜயை ஓவர் பில்டப் செய்து காட்சிகள் வைக்கப்பட்டிருந்தது.

அதோடு, படத்தின் கதை, திரைக்கதையும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஒருபக்கம் அஜித் ரசிகர்கள் இப்படத்தை ட்ரோல் செய்தனர். இந்த படம் தோல்வி அடைந்தது. மேலும், இந்த படம் வெளியாகி பல வருடங்கள் ஆகியும் இப்போது விஜயை பிடிக்காதவர்கள் இந்த படத்தின் பெயரை சொல்லி ட்ரோல் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த படத்தை தயாரித்த சங்கிலி முருகன் ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்தார். அப்போது, சுறா படம் பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‘அந்த கண்றாவிய பத்தி பேச என்ன இருக்கு?. நல்ல விஷயங்களை மட்டும் பேசுவோம்’ என பதில் சொன்னார். எனவே, அஜித் ரசிகர்களும், விஜய் ரசிகர்களும் அந்த வீடியோவை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து விஜயை கிண்டலடித்து வருகின்றனர்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment