விஜயகாந்த் மகனுக்கு அல்வா!.. வீடியோலாம் போட்டியே ராகவா!.. இதுக்குதான் இவ்வளவு சீனா?!...
தமிழ் சினிமாவில் எல்லோரும் மதிக்கும் மற்றும் எல்லோருக்கும் பிடித்த நடிகராக இருந்தவர் விஜயகாந்த். எல்லோருக்கும் உதவும் குணம் கொண்டவர். நடிகர்களுக்கோ அல்லது திரையுலகுக்கோ ஒரு பிரச்சனை எனில் உடனே வேட்டியை மடித்துக்கொண்டு களத்தில் இறங்கிவிடுவார்.
அவருக்கு முன் யாரும் பசியோடு இருக்கக் கூடாது. படப்பிடிப்பில் எல்லோரும் ஒரே மாதிரியாக சாப்பிட வேண்டும் என நினைத்த முதல் நடிகர் விஜயகாந்த் மட்டுமே. விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். சகாப்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஆனால், அவருக்கு சரியான ஒப்பனிங் கிடைக்கவில்லை. அதன்பின் மதுர வீரன் எனும் படத்தில் நடித்தார். அந்த படமும் பெரிதாக ஓடவில்லை. அதன்பின் அப்பா விஜயகாந்தோடு இணைந்து தமிழன் என்று சொல் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. ஆனால், விஜயகாந்தின் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் அப்படம் டேக் ஆப் ஆகவில்லை.
சில மாதங்களுக்கு முன் விஜயகாந்த் மரணமடைந்தார். விஜயின் வளர்ச்சிக்காக செந்தூர பாண்டி படத்தில் விஜயகாந்த் நடித்து கொடுத்ததற்கு நன்றி கடனாக விஜயும் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்தில் நடிக்க வேண்டும் என விஜயகாந்தின் ரசிகர்கள் பலரும் சொன்னார்கள். எதிர்பார்த்தார்கள். ஆனால், விஜய் அதை செய்யவே இல்லை.
அதேநேரம், விஜயகாந்த் இறந்தபோது நடிகர் விஷால் சண்முக பாண்டியனுக்காக நானும் எதாவது செய்வேன் என சொல்லிவிட்டு போனார். அதோடு சரி. எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. அதேபோல், நடிகர் ராகவா லாரன்ஸ் கேப்டனுக்காக அவரின் மகன் நடிக்கும் படத்தில் நான் நடித்து கொடுப்பேன் என வீடியோவே வெளியிட்டார்.
எனவே, சண்முக பாண்டியன் இப்போத் நடித்து வரும் படைத் தலைவன் என்கிற படத்தில் லாரன்ஸுகு ஒரு கேமியோ ரோல் உருவாக்கப்பட்டது. பல நாட்கள் படக்குழு ராகவா லாரன்ஸுக்காக காத்திருந்தனர். ஆனால், லாரன்ஸ் கால்ஷீட் கொடுக்கவில்லை. பொறுத்து பொறுத்து வெறுத்துப்போன படக்குழு அவர் இல்லாமலேயே படத்தை முடித்துவிட்டனர். படம் ஆகஸ்டு மாதம் வெளியாகவுள்ளது.
இதைத்தொடார்ந்து லாரன்ஸ் மாஸ்டர் செய்தது சரியா? என பலரும் சமூகவலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.