விஜயை திட்டுனாங்களே... திருவண்ணாமலை சம்பவம் குறித்து ரஜினிகாந்த் உளறிய திடீர் சம்பவம்
Rajinikanth: நடிகர் ரஜினிகாந்த் விமான நிலையம் வரும்போது அவரிடம் திருவண்ணாமலை சம்பவம் குறித்து கேட்டபோது அவர் பேசிய விஷயங்கள் தற்போது வீடியோவாக வைரல் ஆகி வருகிறது.
சமீபத்தில் ஃபெங்கல் புயலின் கோர தாண்டவத்தால் திருவண்ணாமலையில் மூன்று இடங்களில் மலை சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி பல பாதிக்கப்பட்ட நிலையில் 7 பேர் உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது. பலர் தங்களுடைய இருப்பிடங்களை மொத்தமாக இழந்தனர்.
இதற்காக பலரிடமிருந்து அவர்களுக்கு நிவாரணம் குவிந்து வருகிறது. தமிழக வெற்றி கழகம் என்னும் அரசியல் கட்சியை நிறுவியிருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய இருப்பிடத்திற்கு அழைத்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருந்தார்.
அவர் நேரில் வர முடியாததற்கு அங்கு வந்தால் கூட்டம் கூடிவிடும் சரியாக பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாட முடியாது என்பதுதான் காரணமாக கூறப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து நடிகர் விஜயை பலரும் இன்னமும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் திருவண்ணாமலை சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் நடிகர் ரஜினிகாந்த் எப்போ என திருப்பி கேள்வி கேட்கிறார்.
சமீபத்தில் நடந்த விஷயம் எனக் கூற ஓ மை காட் என அவர் முடித்துக் கொண்டார். கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் இத்தனை துயர சம்பவத்தில் இப்படி பொறுப்பில்லாமல் பதில் சொல்வது தற்போது கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
ரஜினிகாந்த் எந்தவித சிகிச்சைக்காக வெளிநாடுகள் செல்லவில்லை. இந்தியாவில் தான் ஷூட்டிங்கில் இருக்கிறார். அவருக்கு இந்த விஷயம் தெரியாது என அவர் கேள்வி கேட்பது எப்படி உண்மையாகும். நல்லது செய்த விஜய் விமர்சிக்கும் பலரும் இதே கேள்வி கேட்காமல் இருப்பது எப்படி என பலரும் பேச தொடங்கி இருக்கின்றனர்.
நடிகர் விஜய் போலவே அரசியலில் ஆர்வம் கொண்டு கட்சியை தொடங்க ரஜினிகாந்த முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் திடீரென தன்னுடைய முடிவிலிருந்து பின்வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. ரஜினிகாந்த் பேசியிருக்கும் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.