கோட் படம் பார்த்துவிட்டு வெங்கட் பிரபுவுக்கு கால் செய்த ரஜினிகாந்த்… என்ன சொன்னார் தெரியுமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:43  )

GoatMovie: விஜய் நடிப்பில் செப்டம்பர் மாதம் வெளியான கோட் திரைப்படம் பார்த்து சூப்பர்ஸ்டார் கால் செய்து பேசிய சம்பவம் குறித்து வெங்கட் பிரபு தன்னுடைய எக்ஸ் பதிவில் வெளியிட்டு இருக்கிறார்.

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார். இப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பு செய்து இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது.

விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருந்தனர். அப்பா மற்றும் மகன் என விஜய் இருவேடங்களில் நடித்திருந்தார். வித்தியாசமான பல கேமியோக்களை படத்தில் புகுத்தி ரசிகர்களிடம் லைக் வாங்கினார்.

இப்படம் செப்டம்பர் 5ம் தேதி உலகம் எங்கும் வெளியாகி வரவேற்பை பெற்றது. வசூல் வேட்டை நடத்தியது. 500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் சாதனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்னும் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் கோட் திரைப்படம் விஜயின் சினிமா வாழ்க்கையில் கடைசி திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு பல பிரபலங்கள் வாழ்த்தி சொல்ல்லி இருந்தனர்.

இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கோட் படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு கால் செய்து வாழ்த்தி இருப்பதாக அவர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நன்றி, தலைவா. என்னை அழைத்ததுக்காகவும், எங்கள் #GOAT படத்தை அன்புடன் அரவணைத்ததற்காகவும், முழு மனதுடன் பாராட்டியதற்கு மீண்டும் நன்றி எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

பொதுவாகவே தற்போது விஜய் மற்றும் ரஜினிக்கு தான் போட்டியாக இருக்கும் நிலையில் சூப்பர்ஸ்டார் இவ்வாறு செய்திருப்பது ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

Next Story