ஓ மை காட்: ரஜினி ரொம்ப தெளிவானவரு... இப்ப இல்ல... அப்பவே..! பிரபலம் சொல்வது என்ன?

திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலியானது குறித்து உங்களோட கருத்து என்னன்னு நிருபர்கள் கேட்கும்போது பலியா? 'ஓ மை காட்'னு ரஜினி சொன்னது இப்போது சர்ச்சையாகி உள்ளது. இதுகுறித்து பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு என்ன சொல்றாருன்னு பாருங்க...
ரஜினி ஜெய்ப்பூரில் கூலி படப்பிடிப்புக்காக சென்றுள்ளார். அப்போது நிருபர்கள் திருவண்ணாமலை நிலச்சரிவில் 7 பேர் பலியானார்கள். அதுபற்றி உங்க கருத்து என்னன்னு கேட்குறாங்க. ஓ மை காட் எனக்குத் தெரியாதுன்னு சொல்லி விட்டார். அந்த வகையில் ரஜினி ஏன் தெரியாதுன்னு சொல்லிருக்காரு என்பது யோசிக்க வேண்டியுள்ளது.
என்னன்னா ரஜினி இப்போது திருவண்ணாமலையில் நடந்த விஷயம் தெரியும்னு சொன்னாருன்னா நீங்க நேரடியா போயிக்கலாமே. அறிக்கைக் கொடுத்து இருக்கலாமேன்னு கேள்வி வரும். ரஜினி அண்ணாமலையாரின் தீவிர பக்தர். அண்ணாமலைன்னு ஒரு படம் எடுத்ததே அதுக்காகத் தான். இப்படி ஒரு மழை, வெள்ளம், புயல் திருவண்ணாமலையில அடிச்சிருக்கு.
அதுமாதிரி விஜய் பனையூரில் வைத்து வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கொடுத்தாரு. அதைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு விஜய் சம்பந்தமான கேள்வியும் வரும். அப்புறம் சீமான் சம்பந்தமான கேள்வி வரும். நீங்களும், சீமானும் சந்தித்தீர்களே அது என்ன விஷயம் என்றும் கேட்பார்கள். அதற்காகத் தான் எந்த ஒரு சிக்கலையும் சந்தித்துவிடக்கூடாது என்று மிகத் தெளிவாக 'ஓ மை காட்'னு பதில் சொல்லி நழுவி இருக்கிறார்
இதுதான் ரஜினி. கூலி படத்தில் அமீர்கான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரை நடிப்பு ராட்சசன் என்றே சொல்லலாம். சுருதிஹாசனையும் நடிக்க வைத்துள்ளார். அதே நேரம் அமீர்கானை வைத்து பில்டப் கொடுக்க வேணாம். அவருக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஸ்கிரீன் ஸ்கோப் கொடுக்கணும் என்றும் உறுதியாகச் சொல்லிவிட்டாராம் ரஜினி.
அதே நேரம் ரஜினி இப்போ இல்ல. முன்னாடியே ரொம்ப தெளிவா இருந்தாரு. நல்லவனுக்கு நல்லவன் படத்தில் 'வச்சிக்கவா ' பாடலில் உடல் எல்லாம் சீரியல் லைட்டைக் கட்டி ஆடுவாங்க. அப்போ நிறைய கலர் டிவியில் படம் ஓடிக்கிட்டு இருக்கும். அதுல கோடு கோடா விழுந்தது. இதுக்கு என்ன பண்ணலாம்னு எல்லாரும் யோசிக்கும் போது ரஜினி ஒரு நபரைப் பற்றி சொல்கிறார்.
அவர் வந்தால் இதை சரிசெய்து விடுவார்னு சொல்றாரு. அது வேறு யாருமல்ல. தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன்தான். அவர் வந்ததும் ரஜினி சொன்னது போலவே அவரும் சரிசெய்து கொடுக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.