மாஸ்டர் படம் உண்மையிலேயே நஷ்டமா?!.. சேவியர் பிரிட்டோ சொன்னது என்ன?!..

Master movie: தனது உறவினர் சேவியர் பிரிட்டோவின் தயாரிப்பில் விஜய் நடித்த திரைப்படம்தான் மாஸ்டர். பட ரிலீஸுக்கு தயாரான போது கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. எனவே, ஓடிடியில் வெளியிடலாமா என்று கூட தயாரிப்பாளர் யோசித்தார். ஆனால், படத்தை தியேட்டரில்தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என விஜய் கறாராக சொன்னதால் 6 மாதங்கள் காத்திருந்து படத்தை ரிலீஸ் செய்தார்கள்.
ஓடிடி ரிலீஸ்: கொரோனா ஊரடங்கின்போது பல மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டது. ஒருபக்கம், அமேசான், நெட்பிலிக்ஸ் போன்ற ஓடிடி நிறுவனங்கள் பிரபலமாகி ரசிகர்களில் அதில் புதிய படங்களை பார்க்க துவங்கினார்கள். சூர்யாவே தனது சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய இரண்டு படங்களையும் ஓடிடியில் வெளியிட்டார்.
மாஸ்டர் திரைப்படம்: எனவே, ரசிகர்கள் இனிமேல் தியேட்டருக்கு வருவார்களா என்கிற பயம் திரையுலகினருக்கு வந்தது. ஊரங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டவுடன் மாஸ்டர் படம் வெளியாகி ரசிகர்களை தியேட்டருக்கு இழுத்து வந்தது. இப்படம் மெகா ஹிட் அடித்து திரையுலகினருக்கும் நம்பிக்கை கொடுத்தது. இதனால், திரையுலகமே விஜய்க்கு நன்றி சொன்னது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த முதல் திரைப்படம் இது. அதோடு, விஜய்க்கு இணையாக விஜய் சேதுபதிக்கும் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக கலக்கியிருந்தார். அனிருத்தின் இசையில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட் ஆனது.
சேவியர் பிரிட்டோ: இந்நிலையில், இந்த படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ மாஸ்டர் படத்தால் எனக்கு 90 கோடி நஷ்டம் என சொன்னதாக வீடியோ ஆதாரத்தோடு சிலர் செய்திகளை வெளியிட்டனர். இதை உண்மை என நம்பி பல ஊடங்களும் அப்படி செய்திகளை வெளியிட்டது. ஆனால், அதில் உண்மையில்லை என்பது தெரியவந்திருக்கிறது.
தனது மனைவி ஒரு கால்பந்தாட்ட டீமை எடுத்து நடத்தினார். அதில் 90 கோடி நஷ்டம் என சேவியர் பிரிட்டோ சொன்னதை வெட்டி மாஸ்டர் படத்தால் நஷ்டம் என அவர் சொன்னது போல எடிட் செய்து வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது. இதை உண்மை என நம்பி விஜயை பிடிக்காதவர்களும், அஜித் ரசிகர்களும் கடந்த 2 நாட்களாக இந்த தகவலை டிவிட்டரில் பகிர்ந்து வந்தது குறிப்பிடத்தக்கது.