வேலுநாச்சியாரா? ஜான்சிராணியா? விஜயை கலாய்க்க போய் வசமாக சிக்கிய சீமான்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:19  )

Seeman: அரசியலுக்கு வந்த நடிகர் விஜயை நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சீமான் முதலில் தன்னுடைய தம்பி என பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால் தற்போது மாநாடு முடிந்த பின்னர் அவருடைய போக்கு மொத்தமாக மாறி இருக்கிறது.

நடிகர் விஜய் தன்னுடைய முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் சமீபத்தில் நடத்திக் கொடுத்திருக்கிறார். அதில் பிரத்தியேகமாக பேசியவர் பல கட்சிகளையும் விமர்சித்தார். இதில் மாற்று அரசியல் எனக் கூறிய தான் யாரையும் ஏமாற்ற வரவில்லை என நடிகர் விஜய் மறைமுகமாக சீமானை தாக்கி பேசியிருப்பார்.

இதனால் பலரும் சீமானை கலாய்த்து வந்தனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பெரம்பலூரில் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டது. அதில் கலந்து கொண்ட சீமான் தவெக மாநாடு குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் மோசமாக விமர்சித்து பேசியிருந்தார்.

விஜயை கூமுட்டை என்றும், ஏதாவது ஒரு பக்கம் நிற்க வேண்டும். நடுவில் நின்றால் லாரி எடுத்து இறந்து விடுவாய் என விமர்சித்திருந்தார். இந்த பேச்சில், வேலு நாச்சியார் கட்டவுட்டை வேண்டுமானால் விஜய் வைக்கலாம். ஆனால் அவர் யார் என்று அவருக்கு தெரியுமா?

நீங்கள் வைத்திருக்கும் கட்டவுட் நான் தான் வருகிறேன். அரசு என்ற ஓவியரிடம் வரைய சொல்லி வாங்கியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த பேச்சு வைரலான நிலையில், தற்போது அது குறித்து பலரும் விவாதித்து வருகின்றனர். ஆனால் அந்த ஓவியம் அஞ்சல் தலையில் வெளியானது.

அந்த நேரத்தில் சீமான் கட்சி கூட தொடங்கவில்லை. வாழ்த்துக்கள் திரைப்படத்தை இயக்கிக்கொண்டு அதற்கான பிரமோஷனில் இருந்தார். கட்டவுட் வைத்தியே தம்பி உனக்கு அவங்க வரலாறு தெரியுமா? வேலு நாச்சியார் கணவன் இறந்த பிறகு அவர் உடல் மீது சத்தியம் செய்துவிட்டு தன்னுடைய குழந்தையை முதுகில் கட்டிக்கொண்டு ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டார் என பேசி இருக்கிறார்.

ஆனால் இந்த வரலாறு ஜான்சிராணி உடையது. வேலு நாச்சியார் தன்னுடைய கணவர் இறந்து எட்டு ஆண்டுகளுக்கு பின்னரே வெள்ளையர்களுக்கு எதிராக போரிட வந்தார். இதனால் சீமான் விஜயை விமர்சிக்கிறேன் என்ற பெயரில் தற்போது வசமாக சிக்கி கலாய்க்கப்பட்டு வருகிறார்.

Next Story