காக்கவச்சு கவுத்திப்புட்டாரே! ராஜ்கமலில் இருந்து வெளியேறிய சிம்பு.. அட இப்படி ஆகிப்போச்சே

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் சிம்பு. தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு . தக் லைஃப் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகின்றன.

நாயகன் படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 30 வருடங்கள் கழித்து கமலும் மணிரத்தினமும் இணையும் கூட்டணி என்பதால் இந்த படத்தில் மீது பெருமளவு எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து வருகிறார்.

ஏற்கனவே கமலின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிப்பதாக இருந்தது. அந்த படத்திற்கான பிரீ ப்ரொடெக்ஷன் எல்லாம் முடிந்து படப்பிடிப்பிற்கு தயாராகி இருக்கும் நிலையில் ஏதோ ஒரு காரணத்தால் அந்த படத்தின் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.

அதன் பிறகு தான் தக் லைஃப் படத்தில் சிம்பு கமலுடன் இணைந்தார். தற்போது வந்த தகவலின் படி சிம்பு நடிக்கும் அந்த படம் இப்போது ராஜ்கமல் தயாரிப்பதாக இல்லையாம். இளையராஜா படத்தை தயாரித்து வரும் மும்பை நிறுவனம்தான் அந்தப் படத்தை தயாரிக்கப் போவதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

இதில் என்ன பிரச்சனை நடந்தது என தெரியவில்லை. திடீரென ராஜ்கமல் நிறுவனம் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக தெரிகிறது. ஆனால் ரசிகர்கள் மத்தியில் கமல் தயாரிப்பில் சிம்பு நடிக்க அதுவும் தேசிங்கு பெரியசாமி இயக்க ஒரு புதிய படம் எனும் போது அந்த படத்தின் மீதும் பெரிய அளவு hype இருந்து கொண்டு இருந்தன.

ஆனால் திடீரென இப்போது இந்த மாற்றத்தால் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டு இருக்கிறது. இருந்தாலும் இனிமேலாவது சிம்புவின் இந்த 48வது படத்தின் படப்பிடிப்பு சூடு பிடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்த படம் நடந்தாலும் நடக்காவிட்டாலும் கமலுடன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் சிம்புவின் ரோல் பெருமளவு பேசப்படும் என்று சொல்லப்படுகிறது.

Next Story