எஸ்கேவை தலையில் தட்டிய சிம்பு… திடீர் அறிவிப்பு பின்னால் இப்படி ஒரு ரகசியமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:34  )

Simbu: 90களின் கனவு நாயகனாக இருந்த நடிகர் சிம்பு தற்போது அதே ஸ்டைலில் ஒரு படத்தின் போஸ்டரை வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். ஆனால் அதன் பின்னால் முக்கிய விஷயம் ஒன்று ஒளிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தமிழ் சினிமாவின் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டிற்குள எண்ட்ரி ஆகி அப்போதே தனக்கென ஒரு கூட்டத்தை பிடித்தவர். தொடர்ச்சியாக இளம் வயதிலேயே நடிகராக தொடர்ந்து நடித்தார்.

அது மட்டுமல்லாமல் சிறுவயதிலேயே வல்லவன் திரைப்படத்தை இயக்கி நடித்தார். அப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றதும் குறிப்பிடப்பட்டது. இப்படி தன்னுடைய ஸ்டைலில் உச்சத்தில் இருந்த நடிகர் சிம்பு சில ஆண்டுகளாக அந்த இடத்தை தவறவிட்டார்.

இந்த கேப்பில் தான் நடிகர் சிவகார்த்திகேயன் கோலிவுட்டில் வளர தொடங்கினார். தற்போது நடிகர் விஜய் அரசியலுக்குள் செல்ல இருக்கும் நிலையில் அவருடைய இடத்தை எஸ்கே பிடிப்பார் என பலராலும் கூறப்பட்டு வருகிறது. இதை விஜயை தன்னுடைய கோட் திரைப்படத்தின் மூலம் சொல்லிவிட சிவாவின் மார்க்கெட் உயர தொடங்கியது.

ரஜினிகாந்தாலும் இன்னும் சில ஆண்டுகள் மட்டுமே கோலிவுட்டில் நிலைத்து நிற்க முடியும். அதனால் இனி தமிழ் சினிமாவை எளிதாக தக்க வைத்துக்கொள்ள முடியும் என நினைத்துக் கொண்டிருந்த எஸ்கேவிற்கு தன்னுடைய டிரேட் மார்க் ஆக்‌ஷன் மூலம் பதில் சொல்லி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

இந்த நேரத்தில் தான் நடிகர் சிம்பு 20 ஆண்டுகளுக்கு முன்னர் தனக்கு உச்சத்தை கொடுத்த ஸ்டைலை மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். இதனால் அவருடைய ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சிம்பு தன்னுடைய சினிமா கேரியரை பிசியாக மாற்றினால் கண்டிப்பாக எஸ்கேவிற்கு பெரிய போட்டியாக அமைய கூடும் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

துப்பாக்கி வாங்கி விட்டால் தப்பித்து விடலாம் என நினைத்த சிவகார்த்திகேயனுக்கு நடிகர் சிம்புவின் அறிவிப்பு பிரச்சினையாக அமையக்கூடும். ஏனெனில் சிவாவால் குழந்தைகளை மட்டுமே இன்று வரை கவர முடிந்திருக்கிறது. ஆனால் நடிகர் சிம்பு எல்லா வகையான ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர் என்பதால் கோலிவுட் இனி போட்டி பயங்கரமாக இருக்கும் எனவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகிறது.

Next Story