சிம்பு குறி வச்சிட்டா எஸ்கே இரை விழும்… ஸ்கெட்ச்சு பக்காவா இருக்கே!… ரெடியா?

Published on: November 7, 2024
---Advertisement---

SK Simbu: சிவகார்த்திகேயனிடம் தளபதி விஜய் துப்பாக்கியை கொடுத்த நேரத்தில் இருந்து அவர்தான் அடுத்த கோலிவுட் என்ற பிம்பத்தை நடிகர் சிம்பு ஒரே பதிவால் சுக்கு நூறாகி இருக்கிறார்.

சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஒரு சில படங்களிலேயே அவருடைய வளர்ச்சி மிகப் பிரம்மாண்டமாக அமைந்தது. தொடர்ச்சியாக வாய்ப்புகளும் குவிந்தது. தற்போது கோலிவுட்டில் முன்னணி பிரபலமாக மாறி இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தளபதி விஜயின் கோட் திரைப்படத்தில் தன்னுடைய இடத்தை அவருக்கு கொடுப்பது போல விஜய் பேசிய வசனம் அவரின் கேரியரில் மிகப்பெரிய வளர்ச்சியை கொடுத்திருக்கிறது. இனி எல்லாமே சிவகார்த்திகேயன் தான் என பலர் பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடிகர் சிம்பு தன்னுடைய விண்டேஜ் ஸ்டைலில் முகத்தைக் கூட காட்டாமல் கொடுத்த சினிமா போஸ்டர் அந்த கூட்டத்தை அப்படியே அவர் பக்கம் திருப்பி இருக்கிறது. கமல் போன்று சினிமாவில் இருக்கும் எல்லா துறைகளிலும் கைதேர்ந்தவர் நடிகர் சிலம்பரசன்.

அவருடைய சொந்த வாழ்க்கையில் நடந்த பிரச்சினையால் பல வருடமாக நடிப்பிலிருந்து ஒதுக்கி இருந்தார். ஆனால் காரண காலத்தில் தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்துக் கொண்டு மாநாடு திரைப்படத்தில் ரீ எண்ட்ரி கொடுத்து சூப்பர் ஹிட் வெற்றியை தன் வசமாக்கி கொண்டார்.

தற்போது மீண்டும் பிஸியாக நடிகராக மாறி இருக்கிறார் சிம்பு . கமல்ஹாசனின் தக்லைஃப் திரைப்படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு தற்போது அஸ்வின் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்த படத்தின் போஸ்டரை தன்னுடைய விண்டேஜ் ஸ்டைலில் வெளியிட்டு இருக்கிறார். அஸ்வின் மாரிமுத்து தன்னுடைய டிராகன் திரைப்படத்தை முடித்துவிட்டு இப்படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

20ஸ்களின் தொடக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த திரைப்படங்கள் இளைஞர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும். அதனால் இத்திரைப்படம் இப்போதைய ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. இது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக தேசிங் பெரியசாமி, ஜூட் ஜோசப் உள்ளிட்ட இயக்குனர்களுடன் சிம்பு கைகோர்க்க இருக்கிறார்.

சிவகார்த்திகேயனின் திடீர் உச்சம் தன்னுடைய இடத்தை இழந்து விடுவோமோ என பல நடிகர்கள் பயந்து கொண்டிருக்கின்றனர். அதற்கு ஏற்ப சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்தின் ப்ரோமோஷனமும் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டு வருகிறது. தன் மீது உள்ள நெகடிவ் இமேஜை காலி செய்ய பெரிய அளவில் தொகையை இறக்கி சிவகார்த்திகேயனே இதை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் சிம்பு தன்னுடைய ஆட்டத்தை தொடங்கி விட்டதாக பலர் பேசி தொடங்கி இருக்கின்றனர். மற்ற நடிகர்கள் போல சிம்பு தொடர்ச்சியாக படங்களை சரியாக செய்து முடித்தால் கோலிவுட்டில் அசைக்க முடியாத இடத்தை பிடிப்பார் என்றே நம்பப்படுகிறது.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment