நான் சொல்ல மாட்டேன்!. அஜித் சொல்லுவாரு!.. செம அப்டேட் கொடுத்த சூப்பர் அப்டேட்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:12  )

Ajithkumar: அஜித்துக்கு ஒரு இயக்குனரை பிடித்துவிட்டால் தொடர்ந்து அவரின் இயக்கத்தில் நடிக்க துவங்கிவிடுவார். ஏனெனில், புதிதாக ஒரு இயக்குனருடன் பயணிப்பதை விட நன்றாக பழக்கமான இயக்குனருடன் பயணிப்பதையே அஜித் அதிகம் விரும்புவார். அதனால்தான் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் 4 படங்களில் நடித்தார்.

இருவரும் முதலில் வீரம் படத்தில் கூட்டணி சேர்ந்தனர். சிவாவை அஜித்துக்கு மிகவும் பிடித்துவிட்டது. அதோடு, வீரம் படமும் சூப்பர் ஹிட் ஆனது. அடுத்து வேதாளம் படத்தை உருவாக்கினார்கள். அந்த படமும் சூப்பர் ஹிட். அடுத்து, 2 கதைகள் சொன்னார் சிவா. ஒன்று விவேகம் மற்றொன்று விஸ்வாசம்.

விவேகம் பட கதையை முதலில் செய்வோம் என்றார் அஜித். ஆனால், அந்த படம் ரசிகர்களை ஏமாற்றியது. என்னால்தான் இப்படி ஆனது. உங்களை ஒரு தோல்வி பட இயக்குனர் என்கிற அடையாளத்தோடு அனுப்ப மாட்டேன். மீண்டும் இருவரும் ஒரு ஹிட் படம் கொடுப்போம் என அஜித் சொல்லி உருவானதுதான் விஸ்வாசம்.

ரஜினியின் பேட்ட படத்தோடு வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. அப்படி என்ன இந்த படத்தில் இருக்கிறது என ரஜினியே விஸ்வாசம் படத்தை பார்த்தார். அதன்பின்னரே சிவாவை அழைத்து கதை கேட்டார். அப்படி உருவான திரைப்படம்தான் அண்ணாத்தே. ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இப்போது சூர்யாவை வைத்து கங்குவா படத்தை எடுத்து முடித்திருக்கிறார் சிவா. ஒரு வரலாற்று கதை கொண்ட படமாக கங்குவா உருவாகியிருக்கிறது. அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் தேதி திட்டமிட்டு அதன்பின் நவம்பர் 14ம் தேதி தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தை புரமோட் பண்ணும் விதமாக ஊடகங்களில் பேச துவங்கிவிட்டார் சிவா.

அப்போது ‘கங்குவா படத்துக்கு பின் கண்டிப்பா அஜித் சார் கூட ஒரு படம் பண்ணுவேன். 5வது முறை எங்களின் கூட்டணி வெற்றியை கொடுக்கும் ஆனால், அதை நான் சொல்லக்கூடாது. அஜித் சார் சொன்னா நல்லா இருக்கும்’ என சொல்லி இருக்கிறார். அஜித் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களை முடித்துவிட்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Next Story