சிவகார்த்திகேயன் நடிச்சதிலேயே இந்தப் படத்துக்குதான் வசூல் அதிகம்... எத்தனை கோடி தெரியுமா..?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:30:42  )

தமிழ் சினிமாவில் விஜய் தொலைக்காட்சியில் காமெடியனாக அறிமுகமாகி தற்போது மிகப்பெரிய நடிகராக வளர்ந்து நிற்கின்றார் நடிகர் சிவகார்த்திகேயன். தொடர்ந்து கமர்சியல் ஹீரோவாக நடித்து வந்த சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படத்தின் மூலமாக ஒரு ஆக்ஷன் ஹீரோவாக உருமாறி இருக்கின்றார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான அமரன் திரைப்படம் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. நம் நாட்டிற்காக வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த திரைப்படத்தை இயக்கி இருக்கின்றார் ராஜ்குமார் பெரியசாமி. இதில் முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார் சிவகார்த்திகேயன்.

மேலும் அவரது மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸ் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து இருக்கின்றார். இந்த ஆண்டு தீபாவளிக்கு அமரன் திரைப்படத்துடன் நடிகர் கவினின் பிளடி பெக்கர் திரைப்படமும், ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படமும் வெளியாகி இருந்தது. இதில் சிவகார்த்திகேயன் அமரன் திரைப்படம் மக்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கின்றது. முதல் நாளிலேயே தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றிருப்பதால் மக்கள் அமரன் திரைப்படத்தை பார்ப்பதற்கு திரையரங்குகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் தொடர்ந்து வரும் நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று கூறப்படுகின்றது.

அமரன் திரைப்படம் முதல் நாளில் உலகம் முழுவதும் 23 கோடி வசூல் செய்து இருக்கின்றது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அமரன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 13 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த வசூல் சிவகார்த்திகேயன் திரைப்படங்களிலேயே அதிகமாகும்.

இதற்கு முன்னதாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் திரைப்படம் தான் 10.5 கோடி ரூபாய் வசூல் செய்து சிவகார்த்திகேயனின் படங்களிலேயே அதிக வசூல் பெற்ற படத்தில் முதல் இடத்தில் இருந்தது. இந்நிலையில் அதனை முறியடித்து அமரன் திரைப்படம் 13 கோடி வசூல் செய்திருக்கின்றது. இது சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கு தமிழகத்தில் கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய ஓபனிங் ஆகும். இந்த வசூல் வரும் நாட்களில் நிச்சயம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story