எஸ்.கே. கேட்ட கேள்வியில் கடுப்பான வெங்கட்பிரபு!.. படம் டிராப்புன்னு சொல்றாங்க!...

by ராம் சுதன் |

சென்னை 28 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனாராக அறிமுகமானவர் வெங்கட்பிரபு. இவர் கங்கை அமரனின் மகன். திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்த வெங்கட்பிரபு ஒரு கட்டத்தில் இயக்குனராக மாறினார். முதல் படமே ஹிட் அடித்தது.

எனவே சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். இதில் அஜித்தை வைத்து அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம், சூப்பர் ஹிட் அடித்தது. இதையடுத்து வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிக்க முன்னனி நடிகர்கள் ஆசைப்பட்டனர். அப்படித்தான் சூர்யாவை வைத்து மாஸ் என்கிற மாசிலாமணி, கார்த்தியை வைத்து பிரியாணி ஆகிய படங்களை இயக்கினார்.

அந்த படங்கள் சரியாக ஓடவில்லை. அதன்பின் சென்னை 28 படத்தின் 2ம் பாகத்தை எடுத்தார். அதன்பின் சிம்புவின் இயக்கத்தில் மாநாடு படத்தை இயக்கினார். வெங்கட்பிரபு இயக்கியதிலேயே அதிக வசூல் பெற்ற படமாக மாநாடு படம் அமைந்தது. கிட்டத்தட்ட 100 கோடியை இப்படம் வசூல் செய்தது.

இதனையடுத்து விஜயை இயக்கும் வாய்ப்பு வெங்கட்பிரபுவுக்கு வந்தது. அப்படித்தான் கோட் படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய் அப்பா, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். டீ ஏஜிங் மூலம் விஜயை மிகவும் இளமையாக காட்டவிருக்கிறார்கள். ஏற்கனவே சில புகைப்படங்களும், பாடல் வீடியோவும் வெளியாகியுள்ளது.

கோட் திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து வெங்கட்பிரபு ஒரு படம் இயக்கவிருப்பதாக சொல்லப்பட்டது. ஒருபக்கம், அடுத்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க மறுத்த ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாக சொல்லப்பட்டது.

வெங்கட்பிரபு இயக்க எஸ்.கே. நடிக்கும் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக இருந்தது. வெங்கட்பிரபு படத்தின் மையக்கதையை மட்டும் சொல்லி இருக்கிறார். ஆனால், படத்தின் முழுக்கதையையும் என்னிடம் கொடுங்கள். படித்து பார்த்துவிட்டு சொல்கிறேன் என எஸ்.கே.சொல்ல கடுப்பாகிவிட்டாராம் வெங்கட்பிரபு. எனவே, இந்த படம் டிராப் என சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Next Story