Amaran: என்னப்பா இது அமரன் படத்துக்கு வந்த புது பிரச்சனை... கமல்ஹாசனை திட்டி தீர்த்த பிரபலம்!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:44  )

தமிழ் சினிமாவில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 3 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானது. சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம், கவின் நடித்த பிளடி பெக்கர் திரைப்படம் மற்றும் ஜெயம் ரவி நடித்த பிரதர் திரைப்படம். இதில் திரையரங்குகளில் சக்க போடு போட்டு வருகின்றது. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம், கவின் பிளடி பெக்கர் திரைப்படமும் ஒரு அளவுக்கு சுமாரான வெற்றியை கொடுத்திருக்கின்றது. இதில் கவலைக்கிடமான நிலையில் இருப்பது ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் தான்.

ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து அமரன் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து அசத்தியிருக்கின்றார். மேலும் அவரது மனைவி இந்து ரெபாகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருக்கின்றார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது முதலே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.

இந்நிலையில் தற்போது படத்திற்கு புதிய பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது. அதாவது மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதள பக்கங்களில் கண்டனம் எழுந்துள்ளது. மேஜர் முகுந்த் வரதராஜன் ஒரு ஐயர். ஆனால் படத்தில் அதை காட்டவே இல்லை. மேலும் சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் தனது தந்தையான வரதராஜனை நைனா என்று அழைத்து இருப்பார்.

ஐயங்கார் பையன் அப்பாவை நைனா என்று அழைக்க மாட்டார். மேலும் ஐயங்கார் அடையாளத்தை மாற்றி இருக்கிறார்கள் மற்றும் இந்துவை மட்டும் ஒரு கிறிஸ்தவர் என்பதை ஆழமாக படத்தில் பதிவு செய்து இருக்கிறார்கள். முகுந்தின் அடையாளத்தை மட்டும் ஏன் மறைத்திருக்கிறார்கள். ஐயங்காரான கமலஹாசனும் இதை கண்டுகொள்ளாதது ஏன்? என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை முன்னாள் ராணுவ வீரரான என் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

அவர் அதில் தெரிவித்திருந்ததாவது அமைச்சர் முகுந்த் வரதராஜனின் கதையை அப்படியே எடுத்து கவுரவித்திருக்கலாம். ஆனால் சூரரைப் போற்றும் படம் போன்று இது இருக்கின்றது. ஐயங்கார் குடும்பத்தில் பிறந்த மேஜர் முகுந்த் தனது தந்தையை அப்பா என்று தான் அழைப்பார். ஆனால் அவரின் பிராமண அடையாளத்தை காட்டாமல் படத்தில் நைனா என அழைக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த ஹீரோக்களின் வாழ்க்கையை அப்படியே எடுக்காமல் ஏன் மாற்ற வேண்டும். மேஜர் முகுந்த் சில சமயம் விளையாட்டாக தன் அப்பாவை நைனா என்று அழைத்து இருக்கின்றார். ஆனால் அதையே படத்தில் பயன்படுத்தி அவரின் உண்மையான அடையாளத்தை மறைத்தது ஏன்? பயோபிக் என்பது அவரின் வாழ்க்கையை அப்படியே சொல்ல வேண்டும் என்று தெரிவித்து இருக்கின்றார்.

தியாகராஜரின் இந்த ட்வீட்டுக்கு பலரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள். சிவகார்த்திகேயன் பூணூல் போடாதது தான் இப்போது உங்களது பிரச்சினையாக தெரிகின்றதா? அவரது ஜாதியை காட்டாதது ஒரு குற்றம் அல்லவே என்று கூறி வருகிறார்கள். மேலும் கமலஹாசனை ஒரு பிராமணராக இருந்து கொண்டு அமரன் படத்தில் மேஜர் முகுந்த்தின் அடையாளத்தை அவர் ஏன் மறைத்தார் என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Next Story