SKவை ஏன்டா நடிச்சோம்னு ஃபீல் பண்ண வைத்த படம்... எல்லாமே ஒரு பாடம்தானே!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:11  )

தமிழ்சினிமா உலகில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். அஜீத், விஜய் போட்டியாளருக்குப் பிறகு சிம்புவா, தனுஷா என்று கேட்டுக்கொண்டு இருந்த போது இருவரும் இல்லடா நான் தான்டான்னு வந்து நின்றவர் தான் சிவகார்த்திகேயன். அந்தப் படத்தில்

வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் இருந்து டெவலப் ஆனவர் தன் கேரியரை டாப் கியருக்குக் கொண்டு சென்று விட்டார். இப்போது உலகநாயகன் கமல் தயாரித்து வரும் அமரன் படத்தில் வெற்றிகரமாக நடித்து முடித்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் படம். அதுவும் மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மைக்கதை. சாய்பல்லவி, ராகுல் போஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.

இந்தப்படம் வரும் தீபாவளியன்று ரிலீஸ் ஆகிறது. படத்தில் அவரோட கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் அந்தளவுக்கு மெனக்கிட்டுள்ளாராம்.

படத்தில் அவரோட கேரக்டர் சிறப்பாக வரவேண்டும் என்பதற்காக அவர் அந்தளவுக்கு மெனக்கிட்டுள்ளாராம். இந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் மளமளவென்று ஏறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

சிவகார்த்திகேயன் டாக்டர் படத்துக்குப் பிறகு கடைசியாக நடித்த படங்கள் பிளாப். டான், பிரின்ஸ், மாவீரன், அயலான் ஆகிய படங்கள் தான் அவை. அவற்றில் இப்போது பிரின்ஸ் படத்தில் நடித்ததற்காக ஏன்டா நடித்தோம்னு ரொம்பவே ஃபீல் பண்ணியுள்ளார்.

அவர் தான் செய்த அந்தத் தவறைப் பற்றி இப்போது வாய் திறந்துள்ளார். அது என்னன்னு பார்ப்போம். பிரின்ஸ் படம் இயக்குநரோட தப்பு கிடையாது. நான் பண்ணின தப்பு. நான் நடிக்காம வேற ஒரு ஹீரோ நடிச்சிருந்தா கண்டிப்பா அந்தப் படம் ஹிட் ஆகியிருக்கும். அந்தப் படத்துல இருந்து ஒரு பாடம் கத்துக்கிட்டேன் என்கிறார் சிவகார்த்திகேயன்.

கே.வி.அனுதீப் இயக்கிய பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்தனர். இது குழந்தைகளுக்கான படம் போல இருந்தது. தமன் இசை அமைத்து இருந்தார். 2022 தீபாவளிக்கு திரைக்கு வந்தது. படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Next Story