வாரிசு அரசியல்: விஜய் புலியா, பூனையா? சரமாரியாகக் கேள்வி கேட்கும் பிரபலம்...
தளபதி விஜய் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தினார். லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்தனர். அந்த மாநாட்டில் பேசிய விஜய் திமுக தான் எதிரின்னு வெட்ட வெளிச்சம்போட்டுக் காட்டினார். திராவிட மாடல் என்ற பெயரில் பெரியார், அண்ணா புகைப்படங்களை வைத்துக் கொண்டு தமிழகத்தை சுரண்டும் குடும்ப சுயநல அரசியல் செய்பவர்கள் தான் எதிரின்னு சொன்னார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
விஜய் கட்சி குறித்து ஸ்டாலின் மறைமுகமாகப் பேசியுள்ளார். அதாவது புதிது புதிதாக கட்சித் தொடங்குறவங்க எல்லாம் திமுக அழியணும்னு சொல்றாங்க. அவர்களுக்கு எல்லாம் நான் கேட்பது இந்த ஆட்சி செய்திருக்கிற நான்கு ஆண்டு சாதனைகளை எண்ணிப்பாருங்க. அண்ணா கூறுவது போல ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் வாழ்க வசவாளர்கள்.
அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். தேவையில்லாமல் எல்லாருக்கும் நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எங்கள் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை. மக்களுக்காக பணி செய்றதுக்கே எங்களுக்கு நேரம் போதவில்லை என்றார்.
இப்போது பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி விஜய் பேசிய பேச்சுக்குப் பதிலடி கொடுத்துள்ளார் என்னன்னு பார்க்கலாமா...
புதுசா வந்தக் கட்சிக்காரங்க எல்லாம்னு ஸ்டாலின் ஒரு வார்த்தை விட்டுருக்காரு. உடனே இதுக்கு விஜய் பதில் சொல்ல மாட்டாராம். கட்சில உள்ள ஒருத்தர் பதில் சொல்லிருக்காரு. ரெண்டு வருஷத்துல கட்சில உள்ள குடும்ப ஆட்சியை ஒழிச்சிக் காட்டுறோம்னு சொல்றாங்க.
நான் கேட்குறேன். இவர் ஆரம்பத்துல சினிமாவுக்கு எப்படி வந்தாரு? அவங்க அப்பா தானே இவரைத் தாங்கிப் பிடிச்சாரு. அப்படின்னா இவரு வாரிசு இல்லையா? கட்சி ஆரம்பிச்சி 75 வருஷம் ஆச்சு. அவங்க குடும்ப அரசியல் நடத்துறது பெரிய விஷயமல்ல.
ஆனா கட்சி ஆரம்பிச்சதும் மாநாட்டுல அப்பா, அம்மாகிட்ட போய் ஆசிர்வாதம் வாங்குறாரு. இது வாரிசு இல்லையா? ஒரு இயக்குனர் பையன் தானே. அப்புறம் ஏன் நடிக்க வர்றீங்க? வேற வேலைக்குப் போயிருக்கலாமே. 10 வருஷம் உங்க அப்பா தாங்கித் தாங்கிப் பிடிச்சாரு.
அப்புறம் பல இயக்குனர்கள் வந்து தூக்கிவிட்டாங்க. இவரு மட்டும் வாரிசு பண்ணலாம். அவங்க பையன் இன்னும் மீசையே முளைக்கல. இயக்கப் போறேன்னுட்டு வர்றாரு. வாரிசுக்குக் கொஞ்சம் பணம் சேர்ந்ததும் கட்சி ஆரம்பிச்சிட்டேன்னு சொல்லலாம். இதுக்குப் பேரு வாரிசு இல்லையான்னு விஜய் கட்சியைச் சேர்ந்தவங்க யாராவது பதில் சொல்லுங்க.
குடும்ப அரசியல் இல்லையான்னு கம்ப்யூனிஸ்ட் கட்சிக்காரங்க கேட்கலாம். அண்ணன் திருமாவளவன் பேசலாம். உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? விஜய் எந்த பேசிக்கும் இல்லாம எம்ஜிஆர் மாதிரி நானும் பண்றேன்னு சொல்றாரு. புலியைப் பார்த்து சூடு போட்டதாம் பூனை. ஆனா புலியா, பூனையான்னு முடிவு பண்ணாம இறங்கிட்டாரு. வாரிசு அரசியல் பத்தி பேச என்ன தகுதி இருக்கு? என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆலங்குடி வெள்ளைச்சாமி.