நான் நினைச்சு கூட பாக்கல... ஹைதராபாத்தில் கண்கலங்கிய சூர்யா... அப்படி என்ன நடந்துச்சு..?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:47  )

தமிழ் சினிமாவில் மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்கக்கூடிய நடிகர்களில் சூர்யாவும் ஒருவர். தொடர்ந்து தன்னுடைய கதாபாத்திரத்திற்காக பல மெனக்கடல்களை செய்யக்கூடியவர். சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். கங்குவா என்றால் நெருப்பின் நாயகன் என்று பொருள். நடிகர் சூர்யா இந்த திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார்.

வரலாற்று பின்னணியில் மிகவும் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கங்குவா திரைப்படம் உருவாகி இருக்கின்றது. இந்த திரைப்படம் 10-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அடுத்த மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் சர்வதேச அளவில் வெளியாக உள்ளது. பான் இந்தியா திரைப்படமாக பல மொழிகளில் கங்குவா திரைப்படம் ரிலீஸ்-ஆக உள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்திருக்கின்றார்.

சமீப நாட்களாக இப்படத்தின் பாடல், டீசர் போன்றவை வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 26 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. அது மட்டும் இல்லாமல் மும்பை, டெல்லி, ஹைதராபாத் போன்ற இடங்களிலும் பிரமோஷன் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றார்.

நடிகர் சூர்யா நேற்றைய தினம் ஹைதராபாத்தில் ரசிகர்களை சந்தித்தார். இந்த நிகழ்ச்சியின் போது நடிகர் சூர்யா தன்னுடைய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் கண் கலங்கினார். தெலுங்கில் இரண்டு வருடத்திற்கு முன்பு சன் ஆஃப் கிருஷ்ணன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது. இந்த படம் ரீலிஸாகி 2 ஆண்டுகளான பிறகும் ரசிகர்கள் தன் மீது வைத்திருந்த அன்பை கண்டு சூர்யா கண்கலங்கி இருக்கின்றார்.

தொடர்ந்து ஆந்திரா ரசிகர்களுக்கும் தனக்கும் ரத்த சம்பந்தம் இருப்பதாக அவர் தெரிவித்து இருக்கின்றார். அந்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பேசிய அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் கமலஹாசன் சார் என்னுடைய மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். ஏனென்றால் அவர் பல படங்களில் தோல்வி அடைந்தாலும் பின்னர் மீண்டும் எழுந்து விடுவார்.

அவருடைய கம்பேக் சாதாரணமாக இருக்காது. மிகப் பிரம்மாண்டமாக இருக்கும். நான் கொரோனா சமயத்தில் என்னுடைய திரைப்படங்களான சூரரை போற்று மற்றும் ஜெய்பீம் போன்ற இரண்டையும் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிட்டேன். இது எனக்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றேன். மீன் வரும் வரை கொக்கு எப்படி காத்திருக்குமோ அப்படி என்னுடைய எதிர்பார்ப்பு இருக்கின்றது. நிச்சயம் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைக்கும் என்று அவர் அந்த நிகழ்ச்சியில் பேசி இருந்தார்.

Next Story