இனி சூர்யாவை பிடிக்க முடியாது போலவே… விரைவில் பாலிவுட் எண்ட்ரி… மீண்டும் உறுதி செய்த இயக்குனர்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:54  )

Surya: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த சூர்யாவின் எந்த படங்களுமே கடந்த சில வருடங்களாக ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. இந்நிலையில் கோலிவுட்டை தாண்டி தற்போது சூர்யா பாலிவுட்டில் முக்கிய படுத்துவம் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

ஜெய்பீம் மற்றும் சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு சூர்யாவின் நடிப்பில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மட்டுமே கோலிவுட்டில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் அப்படமும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்யவில்லை. இப்படம் வெளியாகியும் இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது.

ஆனால் சூர்யாவின் படங்கள் எதுவும் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கிறது. தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்திருக்கிறார். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இருக்கும் இப்படம் வரும் நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யாவின் சூர்யா44 ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் சூட்டிங் கடைசி கட்டத்தை எட்டி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குனரான ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்நிலையில் பிரம்மாண்டமாக பாலிவுட்டில் உருவாக இருக்கும் கர்ணன் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கிறார். இப்படத்தை இயக்குனர் ஓம் பிரகாஷ் இயக்க இருக்கிறார். சூர்யாவுடன் இணைந்து நடிகை ஜாம்பிகபூர் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து பேசிய இயக்குனர் ஓம்பிரகாஷ் தான் ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே பணியாற்றுவேன். அது முடிந்த பிறகு இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என தெரிவித்திருக்கிறார்.

Next Story