வேட்டையன் உருவானதுக்கு காரணமே சூர்யாதான்! இயக்குனர் சொன்ன சீக்ரெட்

by ராம் சுதன் |   ( Updated:2024-11-08 11:17:43  )
suriya
X

#image_title

ரஜினி நடிப்பில் தச ஞானவேல் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் வேட்டையன். ஜெய்பீம் என்ற ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்தான் தச ஞானவேல். அதுவரை இப்படி ஒரு இயக்குனர் இருக்கிறாரா என்று யாருக்குமே தெரியாது. ஜெய்பீம் படம் கதை அடிப்படையில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினாலும் சூர்யா அதில் நடித்தது அனைவரையும் மிகவும் ஈர்த்தது.

மிகவும் சவாலான கதை ஜெய்பீம். அதில் துணிந்து நடித்து மக்களின் பேராதரவை பெற்றார் சூர்யா. ஜெய்பீம் என்ற ஒரு சமூக கருத்தை உள்ளடக்கிய படத்தை கொடுத்த ஞானவேல் அடுத்து ரஜினியுடன் சேர்ந்து படம் பண்ணப் போகிறார் என்று சொன்னதும் அனைவருக்குமே ஆச்சரியம். ரஜினியை வைத்து எந்த மாதிரியான கதைகளத்தை கொடுக்கப் போகிறார் ஞானவேல் என்றுதான் பேசி வந்தார்கள்.

ஆனாலு ரஜினியின் மாஸ் ஞானவேலின் க்ளாஸ் என படம் மிகப்பெரிய அளவில் வந்திருப்பதாக சொல்லப்படுகிறது.சமீபத்தில்தான் வேட்டையன் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது. இந்த நிலையில் படத்தை புரோமோட் செய்வதற்காக படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களும் பல பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.

இதில் ஞானவேலுவும் ஒரு பேட்டியில் வேட்டையன் படம் உருவான கதை பற்றி கூறியிருக்கிறார்.ஜெய்பீம் படத்திற்கு பிறகு மீண்டும் சூர்யாவுடன் தான் சேர்ந்து படம் பண்ணுவதாக இருந்ததாம். ஆனால் இதற்கிடையில்தான் ரஜினியுடன் சேர்ந்து படம் பண்ணும் வாய்ப்பு ஞானவேலுவுக்கு வந்திருக்கிறது.

ஒரு பக்கம் கங்குவா படம் தாமதாகிக் கொண்டிருக்க உடனே சூர்யா ஞானவேலுவிடம் ரஜினி சாரின் வாய்ப்பை விட்டுராதீங்க. அவருடன் சேர்ந்து படம் பண்ணுங்க. நாம் அப்புறம் சேர்ந்து படம் பண்ணலாம் என சொல்லி அனுப்பி வைத்தாராம். சூர்யா மட்டும் அப்படி சொல்லவில்லையென்றால் வேட்டையன் படமே நடந்திருக்காது என ஞானவேல் கூறினார்.

Next Story