பொண்டாட்டி மட்டும்தான்… நோ டச்.. புரோமோஷனில் கூட சூர்யா செய்த சூப்பர் சம்பவம்..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:58  )

Surya: தமிழ் சினிமாவின் பிரபல ஜோடி சூர்யா மற்றும் ஜோதிகா தான். இன்னும் தங்களுடைய திருமண வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா குறித்த சமீபத்திய வீடியோ ரசிகர்களுக்கு ஆச்சரியமளிக்கிறது.

மும்பையை சேர்ந்த நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அந்த சமயத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். அப்போதிலிருந்தே இருவருக்கும் காதல் தொடங்கியதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக பல வருடங்களாக இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு இருவீட்டார் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என மகனும், மகளும் உள்ளனர்.

ஜோதிகாவின் பெற்றோருடன் இருப்பதற்காக தற்போது சூர்யா தன்னுடைய குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகி இருக்கிறார். அது மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் நடிகர் சூர்யா ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் கங்குவா திரைப்படம் வட இந்தியாவில் 3000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

தமிழ்நாட்டைப் போல மும்பையிலும் பிரம்மாண்டமாக புரமோஷன்களையும் செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா, நடிகை திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அந்த சமயத்தில் தனக்கு அருகில் பாபி தியோல் இருக்கும்போது சூர்யா அவர் தோளில் கை வைத்துக் கொள்கிறார்.

ஆனால் திஷா பதானி நிற்கும்போது கண்ணியமாக அவரிடமிருந்து ஒரு அடி நகர்ந்து நிற்கிறார். அது மட்டுமல்லாமல் கையெடுத்து கும்பிட வைத்து சூர்யா நடந்து கொண்ட விதம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே நடிகைகளிடம் சினிமாவை தவிர்த்து சூர்யா நெருக்கமாக இருக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது.

Next Story