இப்படியே போனா சூர்யா, கார்த்தி அவ்ளோதான்! கொத்துதுனு தெரிஞ்சும் பால ஊத்தி வளர்த்தா எப்படி?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:22  )

சூர்யா நடிப்பில் நவம்பர் 14 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் கங்குவா. இந்தப் படம் இந்த மாதம் 10 ஆம் தேதி ரிலீஸ் ஆகியிருக்க வேண்டிய திரைப்படம். ஆனால் ரஜினியின் பிடிவாதத்தால் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போனது .இந்த ஒரு வயித்தெறித்தல் கங்குவா பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு இருக்கிறது. அது அவருடைய சமீபகால பேட்டிகளை பார்க்கும் போதே தெரிகிறது. இதை பற்றி பிஸ்மி கூறியதாவது;

அது ஏக்கமா வயித்தெரிச்சலா என்பது அவருடைய பேட்டிகளை பார்ப்பவர்களுக்கு தெரியும். அவருடைய பேச்சு சரியான மனநிலையை கொண்ட ஒருவரின் பேச்சு போல எனக்கு தெரியல. எல்லாத்துக்கும் மேல நமக்கு சூர்யா மற்றும் கார்த்தி இவர்கள் இருக்கிறார்கள் என்ற ஒரு தைரியத்தில் தான் அவர் இருக்கிறார்.

சினிமாவில் பெரிய தயாரிப்பாளர்களும் சரி. ஒரு ஹீரோ அல்லது ஒரு பெரிய ஹீரோ நடித்த படத்தை யாரும் குறைவா பேச மாட்டாங்க. அதுவும் பொதுவெளியில் பேச மாட்டாங்க. தனிப்பட்ட விதமா பேசுவாங்களே தவிர பொதுவெளியில் யாரும் பேசியது இல்லை.

பொதுவெளியில் பேசும் போது மிகவும் கவனத்துடன் தான் பேசுவார்கள். ஏனெனில் ஒரு ஹீரோ குறித்து நாம் கமாண்ட் அடித்தோம் எனில் அடுத்த ஹீரோ அதை ரசிக்க மாட்டார். நாளைக்கு நம்மையும் அவர் இப்படித்தான் பேசுவார் என அவர்கள் உண்மையிலேயே இவர் மீது டென்ஷனாகி விடுவார்கள். இதுதான் பொதுவான எதார்த்தம்.

அப்படி இருக்கும் போது இவர் உட்கார்ந்து கொண்டு ரஜினியை ரஜினியின் படத்தையே மட்டம் தட்டி பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம். அப்போ நமக்கு சூர்யா இருக்காங்க. கார்த்தி இருக்காங்க. அப்படிங்கிற அந்த ஒரு தெனாவட்டு தான். ஆனால் இதில் நமக்கு என்ன பெரிய வருத்தம் என்னவெனில் நீங்க பேக்ரவுண்டில் இருக்கீங்க என்ற ஒரு தைரியத்தில் எல்லார் குறித்தும் சகட்டுமேனிக்கு பேசிட்டு போறத சூர்யாவும் கார்த்தியும் உட்கார்ந்து ரசிச்சிட்டு இருக்காங்க.

அது அவர்களுக்கே பின் விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கிடையில் சூர்யா பேசியதும் ஞானவேல் ராஜா பேசியதும் முரண்பாடாக இருக்கிறது என்று பார்க்கும் பொழுது இருவரும் சொல்லி வச்சு தான் பேசுகிறார்கள். நீ அப்படி பேசு. நான் இப்படி பேசுறேன் என திரைக்கதை வசனம் அமைத்து தான் இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது.

இதில் நமக்கு என்ன ஒரு கேள்வி என்னவெனில் 2000 கோடி அளவுக்கு இந்த படம் வசூல் பண்ணும் என கூறிய நீங்கள் ஏன் வேட்டையி்ன் திரைப்படம் ரிலீஸ் ஆன அதே தேதியில் உங்க படத்த ரிலீஸ் செய்யல என்பதுதான்.

எவ்வளவு பெரிய படமாக இருந்தாலும் உங்க படத்தின் மீது இவ்வளவு நம்பிக்கை இருந்தால் அந்தப் படத்தோடு மோத விட்டிருக்கலாமே என பிஸ்மி ஆக்ரோஷமாக ஞானவேல் ராஜாவை அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.

இதற்கிடையில் சமீபகாலமாக ஞானவேல்ராஜா என்ன பேசனும்னு தெரியாம ஏதோ ஏதோ பேசி வருகிறார். அமீர் விஷயத்திலயும் தேவையில்லாமல் பேசி மாட்டிக்கொண்டார். இப்போது ரஜினி விஷயத்தில் கிண்டலாக பேசி ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்ப்பை சம்பாதித்து வருகிறார். இது அவருக்கு பாதகமாக இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக சூர்யாவுக்கும் கார்த்திக்கும் பின் விளைவுகளை ஏற்படுத்தும்.

ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானால் இவர்களின் படங்களுக்குத்தான் ஆபத்து. அதனால் இதை சூர்யாவும் கார்த்தியும் தலையிட்டு ஞானவேல்ராஜாவுக்கு சிறந்த அறிவுரைகளை வழங்கினால் எதிர்காலத்தில் நல்லது.

Next Story