தளபதிக்கு வினை கூடவே இருக்கே… குடித்துவிட்டு தவெக நிர்வாகிகள் செய்த அட்டூழியம்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:01  )

Vijay: நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடக்க இருக்கும் நேரத்தில் கட்சி நிர்வாகிகளால் எழுந்திருக்கும் பிரச்சினை மீண்டும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது.

கோலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தன்னுடைய மிகப் பெரிய சம்பளத்தை விட்டு விட்டு அரசியலுக்குள் நுழைய இருப்பதாக அறிவித்தார். இதை தொடர்ந்து அவருடைய கட்சி பெயரை தமிழக வெற்றிக்கழகம் என அறிக்கையின் மூலம் அறிவித்திருந்தார்.

இதன் அறிவிப்பின்போது பெயரில் எழுத்து தவறாக இருப்பதாக பல சுட்டிக்காட்ட அதையும் அக்கட்சி அடுத்தடுத்த அறிக்கைகளில் சரி செய்தது. தொடர்ந்து கட்சியின் கொடி அறிமுக விழாவில் தாய் மற்றும் தந்தையே அவமதிப்பதாக தளபதி விஜய் மீது பல குற்றம் சுமத்தினர்.

பின்னர கட்சி தரப்பிலிருந்து மற்ற கோணத்தின் வீடியோக்கள் வெளியாகி அதிலும் அவர்கள் மீது தவறில்லை என நிரூபிக்கப்பட்டது. கொடியை பலவாறு பல தரப்பினர் விமர்சனம் செய்தனர். இப்படி தமிழக வெற்றி கழகம் தொடங்கியதிலிருந்து பல சர்ச்சைகளை இன்றுவரை சந்தித்து வருகிறது.

இதிலும் இன்னும் கட்சியின் முதல் மாநாடு கூட நடைபெறவில்லை. பல தடைகளை தாண்டி விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக அக்டோபர் 27ஆம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல முக்கிய விஷயங்களை கட்சியின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். அடுத்த ஐந்து வருடத்திற்கு விக்கிரவாண்டியில் 100 அடி உயரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை பறக்க விடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நேரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் சிலர் குடித்துவிட்டு திருவண்ணாமலை சுங்கச்சாவடியில் பணம் கொடுக்க முடியாது என அங்கு இருந்த ஊழியர்களை மிரட்டிய வீடியோ வெளியாகி இருக்கிறது. இது தற்போது வைரலாகி இருக்கும் நிலையில் நெட்டிசன்களோ உண்மை என்னனு தெரியாமா வீடியோ போடக்கூடாது. விசாரித்தால் தான் தெரியும் என விஜய் கட்சிக்கே ஆதரவு கொடுத்து வருவது ஆச்சரியமளிக்கிறது.

Next Story