Cinema News
டாஸ்மாக் பக்கம் வண்டியை விட்ட விஜய் ஃபேன்ஸ்!.. வெளியான அதிரடி அறிவிப்பு…
மாநாட்டுக்கு வரும் விஜய் ரசிகர்களின் பாதுகாப்பு கருதி ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Tvk maanadu: விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று மாலை விழுப்புரம் அருகேயுள்ள விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில், கலந்து கொள்ள விஜய் ரசிகர்கள் ஆர்வத்த்துடன் சென்று கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் விஜய் ரசிகர்கள் விக்கிரவாண்டியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.
விஜய் சொல்லியும் கேட்காமல் பலர் இருசக்கர வாகனங்களில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே சென்னையிலிருந்து பைக்கில் கிளம்பிய இரு விஜய் ரசிகர்கள் தேனாம்பேட்டையில் லாரி மீது மோதி விபத்தில் சிக்கினர். இதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஒருபக்கம், சென்னையிலிருந்து விழுப்புரத்திற்கு ரயில் சென்ற இரு விஜய் ரசிகர்கள்கள் ரயில் விக்கிரவாண்டி பகுதில் போய்க்கொண்டிருந்தபோது மாநாட்டுக்கு போடப்பட்டிருந்த மின் விளக்குகளை பார்த்துவிட்டு ஆர்வமிகுதியில் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் ஒருவர் உயிரிழந்தார். ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாநாட்டில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் பல கட்டுப்பாடுகளையும் விதித்திருக்கிறது. பைக்கில் வரவேண்டாம், மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது என சொல்லியதோடு, மாநாட்டு திடலில் மது, சிகரெட் உள்ளிட்ட 15 பொருட்களுக்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது.
பல விஜய் ரசிகர்கள் நேற்று இரவே மாநாடு நடக்கும் இடத்திற்கு வந்துவிட்டனர். அவர்களில் சிலர் வரும் வழியில் மது அருந்திவிட்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. தமிழக வெற்றிக் கழக கொடியை பொருத்திகொண்டுள்ள கார்கள் டாஸ்மாக் அருகே நிற்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியானது.
மது அருந்தும் விஷயத்தில் விஜய் என்ன சொன்னாலும் ரசிகர்கள் கேட்க மாட்டார்கள் என்பதால் இந்நிலையில், மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பு கருதி விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை திறக்க வேண்டாம் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.