தளபதி 69 பட தயாரிப்பாளர் படம் டிராப்பா?.. கேஜிஎஃப் ஹீரோவுக்கே அல்வா!.. விஜய்க்கு என்ன காத்திருக்கோ?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:40:44  )

நடிகர் விஜய் நடிப்பில் உருவாக உள்ள தளபதி 69 திரைப்படத்தை பிரபல கன்னட நிறுவனம் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அதற்கு பூஜை அக்டோபர் 4 ஆம் தேதியான நேற்று போடப்பட்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகின.

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கௌதம் மேனன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், மமிதா பைஜு, நரேன் உள்ளிட்ட பலர் அந்த படத்தில் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.

கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் இதற்கு முன்னதாக கன்னடத்தில் கே ஜி எஃப் ஹீரோ யஷ் நடிப்பில் உருவாகி வரும் டாக்சிக் படத்தை தயாரித்து வருகின்றனர். நளதமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்த கீத்து மோகன்தாஸ் அந்தப் படத்தை இயக்கி வருகிறார். யஷ் அக்காவாக நயன்தாரா, ஜோடியாக கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், திடீரென தற்போது கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் யஷ் நடித்து வந்த டாக்சிக் படத்தின் படப்பிடிப்பை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த சில மாதங்களாக அந்த படம் பற்றிய எந்த ஒரு அப்டேட்டும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில், அந்த படம் டிராப் செய்யப்பட்டு விட்டதாகவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பது குறித்து தயாரிப்பு நிறுவனம் தான் விளக்க வேண்டும் எனக்கு கூறுகின்றனர்.

படத்திற்கான பூஜை எல்லாம் பிரம்மாண்டமாக போடுவார்கள் என்றும் படப்பிடிப்பின் போது ஏகப்பட்ட தலையீடு மற்றும் பிரச்சனைகளை செய்வார்கள் என்றும் கூறுகின்றன. நடிகர் விஜய் படத்துக்கும் இதே போன்ற நிலைமை உருவாகி விடுமோ என்கிற அச்சமும் தற்போதைய நடந்துள்ளது. ஆனால் விஜய் உஷாராக தனது அட்மினாக இருந்த ஜெகதீஷ் பழனிச்சாமியை இணை தயாரிப்பதாக மாற்றி இருப்பது தளபதி 69 படத்தை காப்பாற்ற உதவும் என்கின்றனர்.

Next Story