கோட் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை அதிரவிட்ட விஜய்… உண்மைதானே!
விஜய் தன்னுடைய நடிப்பில் உருவாகி இருக்கும் கோட் படத்தை பார்த்து விட்டதாக சில தகவல்கள் இணையத்தில் கசிந்து வரும் நிலையில் அவர் என்ன சொன்னார். உண்மை என்ன என்பது குறித்த முக்கிய தகவல்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.
கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். விஜயுடன் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, சினேகா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் செப்டம்பர்5 என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில் படத்தின் டிரைலர் வெளியீடு விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும் கோட் திரைப்படத்தின் பாடல்கள் இதுவரை விஜய் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை என்பதே படக்குழுவின் கவலையாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான ஸ்பார்க் பாடல் விமர்சனத்திற்கு ஆளாகி இருக்கிறது.
இந்நிலையில் கோட் திரைப்படத்தை விஜய் பார்த்து விட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இதுவரை விஜய் முழு படத்தையும் பார்க்கவில்லையாம். இந்த வார இறுதியில் தான் முழு படத்தை விஜய் பார்க்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. முதல் பகுதியை மட்டும் பார்த்த விஜய், நான் சீக்கிரம் ஓய்வை அறிவித்து விட்டேனோ? இன்னும் உங்களுடன் ஒரு படம் பண்ணி இருக்க வேண்டும் என சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
கோட் படக்குழுவும் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறதாம். பொதுவாக விஜய் திரைப்படங்கள் ரிலீசுக்கு முன்னர் பாசிட்டிவான எதிர்பார்ப்புடன் வெளியாகும் போது சில இடங்களில் இருக்கும் தோல்வி பெரிதாக காணப்படும். அது போல தான் லியோ திரைப்படம் ஓவர் எதிர்பார்ப்பில் வந்த ரசிகர்களுக்கு சில தடுமாற்றங்கள் பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
அது கோட் திரைப்படத்தில் நடக்கக்கூடாது என்பதில் வெங்கட் பிரபு உறுதியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ரிலீசுக்கு முன்னர் ரசிகர்கள் கலாய்ப்பது படத்திற்கு ப்ரமோஷன் ஆக அமையும், அப்படி சினிமா பார்க்க வரும் ரசிகர்களை கவர்ந்தாலே கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.