Thalapathy 69: போடு போடு... இதுல கில்லியாச்சே... தளபதி69 படத்தின் பக்கா அப்டேட்..

by ராம் சுதன் |

Thalapathy 69: தளபதி விஜய் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாக இருக்கும் தளபதி69 படத்தின் சுவாரஸ்ய அப்டேட் இணையத்தில் கசிந்துள்ளது.

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் போது தன்னுடைய சினிமா கேரியரில் இருந்து விடுபடுவதாக அறிவித்தார். தொடர்ந்து தான் அரசியல் கட்சியை அறிவிக்க இருப்பதாகவும் தகவல்கள் வந்தது. இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை அறிவித்தார்.

தொடர்ந்து தான் ஒப்புக்கொண்டு படத்தினை முடித்து கொண்டு தமிழ் சினிமாவில் இருந்து விலகி விடுவேன் எனவும் அறிவித்தார். அதன் படி தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் முடிந்துவிட்ட நிலையில் அடுத்ததாக தளபதி69 படத்தில் நடிக்க இருக்கிறார்.

இப்படத்தினை ஹெச்.வினோத் இயக்க இருக்க கேவிஎன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் அபிராமி, மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.

இதையடுத்து, படத்தின் முதற்கட்ட ஷெட்யூல் தொடங்கி நடந்து வருகிறது. மேலும் இப்படம் பிரபல நடிகர் பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்காக இருக்கும் எனவும் தகவல்கள் கசிந்தது. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.

இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு ஜனவரி 26ந் தேதி வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. ராணுவ கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருக்கும் கதையால் இந்த தேதியை படக்குழு முடிவெடுத்து இருக்கிறதாம்.

மேலும் இப்படத்தினை இந்தாண்டு அக்டோபர் 16ந் தேதி வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது. பொதுவாக விஜய் படத்தின் அப்டேட்டுகளுக்கு இணையம் தெறிக்கும். அந்த வகையில் இந்த அப்டேட்களும் வைரலானாலும், கடைசி என்பதால் விஜய் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

Next Story