அடம் பிடிக்கும் இயக்குனர்!.. பிளடி பெக்கருக்கும் இதே பிரச்சனையா... அட போங்கப்பா!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:31:22  )

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் நடிகர் கவின். விஜய் டிவியின் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கிய கவின் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகப் பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் ஆங்கரிங் செய்து வந்த இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சி தான் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் தன்னுடைய எதார்த்தமான பேச்சு மற்றும் செயலால் மக்கள் மத்தியில் ஒரு நல்ல இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவரின் சினிமா கெரியர் டாப்பில் சென்று கொண்டிருக்கின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு லிப்ட் என்கின்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு டாடா என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவரின் கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது.

தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு வர தொடங்கியது. அந்த வகையில் கவின் கடைசியாக நடித்த திரைப்படம் ஸ்டார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக ஒரு நல்ல படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது பிளடி பெக்கர் என்கின்ற திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கின்றார். இந்த திரைப்படம் நாளை தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சிவபாலன் இயக்கியிருக்கின்றார். மேலும் கவினுடன் இணைந்து ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கவின் ஒரு பிச்சைக்காரனாக நடித்திருக்கின்றார். சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியாகி மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் தயாரிக்கின்றார்.

நாளை தீபாவளியை முன்னிட்டு ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம், ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் கவினின் பிளடி பெக்கர் திரைப்படமும் இந்த ரேஸில் இணைந்து இருக்கின்றது. நாளை இதில் எந்த திரைப்படம் சிறந்த படமாக அமையப் போகின்றது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்நிலையில் பிளடி பெக்கர் திரைப்படத்தை பார்த்த தயாரிப்பு குழுவினர் முதலில் 45 நிமிடங்கள் பிச்சைக்காரன் வேடத்தில் கவின் நடித்திருக்கும் காட்சிகளை மட்டும் குறைக்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அதற்கு இயக்குனர் சிவபாலன் முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார். ஏனென்றால் படத்தில் அந்த காட்சிகளை குறைக்கும் போது படத்தின் நீளமானது குறையும்.

மேலும் கவின் நடித்துள்ள அந்த காட்சிகள் மக்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இதனால் அந்த காட்சிகளை படத்திலிருந்து எடுக்கக் கூடாது என திட்டவட்டமாக இயக்குனர் கூறிவிட்டாராம். மேலும் படம் முதலில் வெளியாகட்டும் மக்கள் அதை பார்த்துவிட்டு என்ன கூறுகிறார்களோ அதை பொறுத்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அவர் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.

Next Story