இட்லி கடை படத்தில் இருக்கும் பிரச்சினை.. தள்ளிப் போவதற்கான காரணம் இதுதானா?

by ராம் சுதன் |

இட்லி கடை: தனுஷ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் இட்லி கடை. இந்தப் படத்தில் தனுஷ் லீடு ரோலிலும் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்கிறார். கூடவே அருண்விஜய் வில்லனாகவும் நடிக்கிறார். படத்தின் ஒவ்வொரு போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ராஜ்கிரண் ஒரு முக்கியமான கேரக்டரில் நடித்திருக்கிறார்.

ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட குழப்பம்: இட்லி கடை படம் ஏப்ரல் 10 ஆம் தேதி ரிலீஸ் என முதலில் அறிவித்திருந்தார்கள். ஆனால் இப்போது வரும் தகவலின் படி ரிலீஸ் தேதி தள்ளி போவதாக சொல்லப்படுகிறது. அதுவும் குட் பேட் அக்லி படத்தின் டீஸர் வெளியானதில் இருந்தே இந்த மாதிரியான தகவல் பரவிக் கொண்டிருக்கின்றது. ஒரு வேளை அஜித் படத்தின் டீஸர் ரசிகர்களிடம் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருவதால் குட் பேட் அக்லி படத்தோடு மோதினால் சரி வராது என்ற காரணத்தினால் படம் தள்ளிப் போகிறதா என்ற ஒரு கேள்வியும் எழுந்தது.

படத்தில் இருக்கும் பிரச்சினை: ஆனால் அதுதான் இல்லை. உண்மையிலேயே இட்லி கடை வேறு ஒரு பிரச்சினையிம் மாட்டியிருப்பதாகவும் அதன் காரணமாகத்தான் படம் தள்ளிப் போகிறது என்றும் அந்தணன் கூறினார். மேலும் அஜித்தை வைத்து தனுஷ் ஒரு படம் இயக்க போகிறார் என்றும் ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. ஒரு வேளை அஜித்தை வைத்து இயக்க இருப்பதால் இந்த போட்டி வேண்டாம் என்று கூட தனுஷ் ஒதுங்குகிறாரா என்றும் ஒரு கேள்வி எழுந்தது.

ஆனால் அதுவும் இல்லையாம். அஜித்திடம் தனுஷ் ஒரு ஒன்லைன் கதையை சொன்னது உண்மைதான். அதற்காக படம் தள்ளிப் போகிறது என்ற அர்த்தம் இல்லை என்றும் அந்தணன் கூறினார். மேலும் இட்லி கடை படத்தில் இருந்த பிரச்சினை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விட்டதாகவும் அது முழுக்க சரியான பிறகு படத்தை ரிலீஸ் செய்யலாம் என்ற எண்ணத்தில் படக்குழு இருக்கிறார்களாம்.

குட் பேட் அக்லி பட டீஸரின் தாக்கம்: ஒரு வேளை குட் பேட் அக்லி படம் நினைத்ததை விட பெரிய அளவில் பெற்றால் அஜித் மீண்டும் ஆதிக்குடன் இணைய வாய்ப்பிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இப்போதைக்கு விஷ்ணு வர்தன் தான் அஜித்தின் அடுத்த சாய்ஸ் என்றும் அந்தணன் கூறினார்.

Next Story