2024 -2025 ல் அஜித் மற்றும் விஜய்க்கு இருக்கும் ஒத்துமைய பாருங்க.. செம சம்பவம்தான்!..

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு அஜித், விஜய் திரைப்படங்களுக்கு இருக்கும் ஒற்றுமை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம். தமிழ் சினிமாவில் தற்போது முக்கிய நடிகர்களாக இருந்து வருபவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். இவரின் திரைப்படங்களை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடி வருகிறார்கள். இவர்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வந்த இவர்கள் இருவரும் தற்போது சிறிய கேப் எடுத்திருக்கிறார்கள். அதிலும் நடிகர் விஜய் தளபதி 69 திரைப்படத்திற்கு பிறகு எந்த படத்தில் நடிக்க மாட்டார். முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருக்கின்றார் என்று கூறி வருகிறார்கள். தமிழக வெற்றிக்கழகம் என்கின்ற கட்சியை தொடங்கி இருக்கும் நடிகர் விஜய் முழு நேரமும் அரசியலில் ஈடுபட இருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
ஆனாலும் கோலிவுட் வட்டாரங்களில் நடிகர் விஜய் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என்று கூறி வருகிறார்கள். இப்படி சினிமாவில் இருந்து நடிகர் விஜய் விலக முடிவு எடுத்திருக்கும் நிலையில் மற்றொருபுறம் நடிகர் அஜித் இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து கார் ரேசில் பங்கு பெற்று வருகின்றார். இந்த வருடத்தில் 9 மாதம் முழுக்க முழுக்க கார் ரேசில் கவனம் செலுத்த இருப்பதாக சமீபத்திய பேட்டியில் அவரே தெரிவித்திருந்தார்.
அதை வைத்து பார்க்கும் போது இந்த வருடத்தில் அஜித் வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்க மாட்டார் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் 2024 மற்றும் 2025 இரண்டு ஆண்டுகளில் அஜித் மற்றும் விஜய்க்கு ஒரு ஒற்றுமை இருக்கின்றது. அது என்னவென்றால் 2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் த கோட் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் கடந்த ஆண்டு அதிக வசூல் செய்த திரைப்படங்களில் முதல் இடத்தை பிடித்த சாதனை படைத்தது.
பாக்ஸ் ஆபிஸில் 460 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் உருவான கில்லி திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு திரையரங்குகளில் சக்கபோடு போட்டது. அதாவது புது திரைப்படத்திற்கு எந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்குமோ அந்த அளவுக்கு வரவேற்பை விஜய் ரசிகர்கள் கில்லி திரைப்படத்திற்கு கொடுத்திருந்தார்கள்.
2024 ஆம் ஆண்டு நடிகர் விஜய்க்கு இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஆனால் 2025 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகாது என்று கூறப்படுகின்றது. அதாவது தற்போது அவர் நடித்து வரும் தளபதி 69 திரைப்படம் முதலில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் 2026 பொங்கலுக்கு இப்படத்தை வெளியிடுவதற்கு முடிவு செய்திருப்பதாக புது தகவல் ஒன்று வெளியாகி இருக்கின்றது.
அதைவைத்து பார்த்தால் 2025 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் எந்த திரைப்படமும் வெளியாகாது. அதேபோல் தான் கடந்த 2024 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் ஒரு திரைப்படம் கூட வெளியாகவில்லை. அதுவே 2025 ஆம் ஆண்டு அடுத்தடுத்து நடிகர் அஜித் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி வெளியாக இருக்கின்றது. இதை தற்போது விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள். மேலும் 2026 ஆம் ஆண்டு அஜித்தின் எந்த திரைப்படம் வெளியாகாது என்று கூறி வருகிறார்கள்.
காரணம் இந்த வருடம் முழுவதும் அஜித் கார்பந்தயத்தில் கவனம் செலுத்தினால் அடுத்த ஆண்டுதான் புதிய திரைப்படங்களை கமிட் செய்வார். அப்படி பார்த்தால் படம் முடிப்பதற்கு நேரம் எடுத்துக் கொண்டால் நிச்சயம் 2026 அஜித்தின் எந்த திரைப்படம் ரிலீசாகாது. இப்படி நடிகர் அஜித்தும் விஜய்யும் சினிமாவை விட்டு அவரவர் பாதைகளில் தனிப்பட்ட செயல்பட்டு வருகிறார்கள் அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.