என் பொண்டாட்டியோட அந்த நடிகரா?… வம்படிச்சு ஜில்லுனு ஒரு காதல் படத்தில் நடித்த சூர்யா..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:05  )

Jothika: சூர்யா தன்னுடைய மனைவியுடன் இன்னொரு நடிகர் நடிப்பது பிடிக்காமல் தான் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் வம்படியாக நடித்ததாக பேசியிருப்பது வைரலாகி வருகிறது.

பிரபல தம்பதிகளில் அதிக அளவில் வரவேற்பை பெற்றது என்னவோ சூர்யா ஜோதிகா ஜோடிதான். முதல்முறையாக இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர். அப்படம் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்த ஜோடி ரசிக்கப்பட தொடர்ச்சியாக 7 திரைப்படங்களில் இணைந்து நடித்தனர். இதைத் தொடர்ந்து இருவரும் பல ஆண்டுகள் காதலித்து வந்த நிலையில் 2006 ஆம் ஆண்டு இரு வீட்டார் சம்பந்தத்துடன் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் ஜோடி எல்லா படங்களிலும் ரசிக்கப்பட்டாலும் திருமணத்திற்கு முன்னர் இருவரும் கணவன் மனைவியாக நடித்த ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களிடம் பெரிய அளவில் பாராட்டுகளைக் குறித்து இருக்கிறது.

தற்போது அப்படத்தில் சூர்யா இணைந்தது குறித்து தன்னுடைய கங்குவா திரைப்பட பிரமோஷனில் பேசியிருக்கிறார். அவர் பேசும்போது, கிருஷ்ணா இயக்கத்தில் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் உருவாக இருந்த போது அதில் நடிக்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் தான் நான் இருந்தேன்.

ஆனால் ஜோதிகா அதில் கண்டிப்பாக நடிக்க போவதாக முடிவெடுத்துவிட்டார். அவருடன் இன்னொரு நடிகர் நடிப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் அப்படத்தில் நானும் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டதாக சூர்யா சிரித்துக்கொண்டே தெரிய தருகிறார்.

இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். கௌதமாக சூர்யா, குந்தவியாக ஜோதிகா, ஐசுவாக பூமிகா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Next Story