Cinema News
ஐய்யோ இதுல தலைவன் படம் இல்லையே! இந்தாண்டு மக்களை கவர்ந்த தரமான படங்களின் பட்டியல்
இந்தாண்டு மட்டுமில்ல மொத்தத்தில் தமிழ் சினிமாவில் வெளியான தரமான படங்களின் லிஸ்ட் இதோ
தமிழ் சினிமாவில் வெளியாகும் பல படங்கள் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடுவதற்கு முதலில் படத்தின் கதை ரசிகர்களை திருப்திபடுத்த வேண்டும். ஆனால் சமீபகாலமாக பிரம்மாண்டம் என்ற பெயரில் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் கதைகளில் கவனம் செலுத்தாமல் வெறுமனே மாஸ், ஆக்ஷன் இவற்றை மட்டுமே வைத்து காசு பார்க்க ஆரம்பிக்கின்றனர்.
அந்த வகையில் இந்தாண்டு அனைத்து தரப்பினரையும் அனைத்து ரசிகர்களையும் திருப்தி படுத்திய தரமான படங்களின் பட்டியலைத்தான் பார்க்க இருக்கிறோம். இந்தாண்டு மட்டுமில்லை. இதுதான் இனிமேல் தமிழ் சினிமாவின் தரமான படங்கள் என்று கூட சொல்லலாம். இனிமேலும் இப்படியான படங்கள் வெளியாகுமா என்பதில் கூட சந்தேகம்தான்.
சுரேஷ் மாரி இயக்கத்தில் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ஒரு சூப்பரான படம்தான் ஜே.பேபி. இந்தப் படத்தில் அட்டகத்தி தினேஷ், மாறன், ஊர்வசி ஆகியோர் முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தனர். குறிப்பாக படத்தில் ஊர்வசிதான் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். படத்தை முழுவதுமாக தாங்கிப் பிடித்தது வேறு யாருமில்லை. கதைதான். அந்தளவுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த படமாக இது அமைந்தது.
நல்ல படத்திற்கு மக்களின் ஆதரவு கண்டிப்பாக உண்டு என்பதற்கு ஒரு உதாரணமாக மகாராஜா படத்தை கூறலாம். நித்திலன் சுவாமி நாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம்தான் மகாராஜா. குரங்கு பொம்மை என்ற ஒரு தரமான படத்தை கொடுத்த கையோடு நித்திலன் எடுத்த படம்தான் மகாராஜா. பல பிரச்சினைகளுக்கு பிறகு இந்தப் படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 120 கோடி வரை வசூல் செய்தது.
துரை செந்தில் இயக்கத்தில் சசிகுமார், சூரி ஆகியோர் நடிப்பில் வெளிவந்த படம் கருடன். ஆக்ஷனையும் கடந்து பக்கா வைலன்ஸ் படமாக இருந்தது கருடன் திரைப்படம். சூரியை ஒரு சிறந்த நடிகராக்கிய திரைப்படமாகவும் இந்த கருடன் திரைப்படம் இருந்தது. வெற்றிமாறனிடம் உதவியாளராக இருந்தவர்தான் துரை செந்தில். அதனால் வெற்றிமாறனின் சாயல் இந்த கருடன் திரைப்படத்திலும் இருந்தது.
கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில் ஹிப் பாப் ஆதி நடித்த திரைப்படம்தான் பி.டி.சார். இந்தாண்டு வெளியான மற்ற படங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தப் படம் ஓரளவு மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட படமாக இந்த பி.டி.சார் திரைப்படம் அமைந்தது. எல்லாருக்கும் ஒரு விழிப்புணர்வை கொடுக்கும் விதமாகத்தான் இந்தப் படத்தை எடுத்திருந்தார் கார்த்திக் வேணுகோபால்.
கார்த்திகேயன் இயக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில் கௌதம் மேனன் மற்றும் இயக்குனர் விக்ரமனின் மகன் ஹீரோவாக நடித்த படம் ஹிட் லிஸ்ட். பக்கா ஆக்ஷன் படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. மற்ற படங்கள் மாதிரி ரொமாண்டிக் போன்ற தேவையில்லாத சீன்கள் எல்லாம் இந்தப் படத்தில் இருக்காது.
இந்தப் படத்தில் சரத்குமார் ஒரு சப்போர்டிங் கேரக்டரில் நடித்திருப்பார். இப்படி இன்னும் நாம் கண்டுகொள்ளாத படங்கள் தமிழ் சினிமாவில் ஏராளம் இருக்கின்றன. பெரிய நடிகர்களை மட்டுமே நம்பி போகாமல் கதையை நம்பி போனால் காசு கொடுத்து படம் பார்ப்பதில் கொஞ்சம் திருப்தியடையலாம்.