ரஜினியும் இல்ல.. விஜயும் இல்ல!.. வசூலை அள்ளியது கமல் படம்தான்!.. திருப்பூர் சுப்பிரமணியம் ராக்ஸ்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:52  )

Kamal vikram: சினிமாவில் யார் வசூல் மன்னன் என்பது எப்போதும் எல்லோரும் தெரிந்து கொள்ள ஆசைப்படும் விஷயமாகவே இருக்கிறது. எம்.ஜி.ஆருக்கு பின் அந்த இடத்தை பிடித்தவர் ரஜினிதான். அதனால்தான் அவருக்கு சூப்பர்ஸ்டார் என்கிற பட்டம் கிடைத்தது. ரஜினியின் நடித்து வெளியானதில் 95 சதவீத படங்கள் லாபம் கொடுத்தவை.

கடந்த 50 வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் ரஜினி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக பாபா, லிங்கா, குசேலன், தர்பார், அண்ணாத்த போன்ற சில படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும், அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். ரஜினியின் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் வசூலை அள்ளியது.

கடந்த சில வருடங்களில் வசூலில் ரஜினியை விஜய் ஓவர் டேக் செய்துவிட்டதாக சொல்லப்பட்டது. ரஜினியை விட விஜயின் சம்பளம் அதிகரித்ததே அதற்கு காரணம். ஆனால், விஜயின் படங்களை விட ஜெயிலர் படம் அதிக வசூலை பெற்றது. 80 கோடி மட்டுமே சம்பளமாக வாங்கி அந்த படத்தில் ரஜினி நடித்திருந்தார்.

படம் சூப்பர் ஹிட் அடிக்கவே அன்பளிப்பு என்கிற பெயரில் கலாநிதி மாறன் ரூ.30 கோடிக்கான செக்கையும், ஒரு விலை உயர்ந்த காரையும் ரஜினிக்கு பரிசளித்தார். ஜெயிலர் படம் ஹிட் அடிக்கவே ரஜினி தொடர்ந்து வேட்டையன், கூலி என படங்களில் ஒப்பந்தமாகி நடிக்க துவங்கினார். வேட்டையன் வெளியாகிவிட்டது. இந்த படம் ஜெயிலர் அளவுக்கு வசூலை அள்ளவில்லை.

இந்நிலையில், ஒரு சினிமாவில் விழாவில் பேசிய வினியோகஸ்தர் சங்க முன்னாள் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ‘இதுவரை தமிழ் சினிமாவில் அதிக வசூல் செய்தது கமல் சார் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படம்தான். தயாரிப்பாளர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர்கள் என எல்லோருக்கும் இப்படம் லாபம் கொடுத்தது’ என சொல்லி இருக்கிறார்.

விக்ரம் படத்தின் மொத்த வசூலை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. ஆனாலும் இப்படம் 600 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது.

Next Story