அஜித்தை மொத்தமாக குத்தகைக்கு எடுத்த திரிஷா!.. இனிமே அவர் காட்டில் அடை மழைதான்!...
Trisha: நயன்தாராவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் திரிஷா. சென்னையில் பிறந்து வளர்ந்தவர். மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். மிஸ் மெட்ராஸ் என்கிற பட்டமும் அவருக்கு கிடைத்தது. அதன்பின்னரே சினிமா வாய்ப்பு அவரை தேடி வந்தது.
அதேநேரம், துவக்கத்தில் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் இல்லாதவராகவே திரிஷா இருந்தார். ஆனால், சினிமா உலகம் அவரை விடவில்லை. பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா என்கிற படம் மூலம் சினிமாவில் நடிக்க துவங்கினார். அதன்பின் சில படங்களில் நடித்தாலும் சாமி திரைப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.
மேலும், தெலுங்கு சினிமாவில் நடிக்க துவங்கி அங்கும் நம்பர் ஒன் நடிகையாக மாறினார். தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, தனுஷ், சிம்பு என எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். ஆனாலும், இவரை நயன்தாரா ஓவர்டேக் செய்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.
எனவே, சில வருடங்கள் திரிஷாவை சினிமாவில் பார்க்க முடியவில்லை. அதன்பின் பொன்னியின் செல்வன் பட வெற்றி திரிஷாவுக்கு பல பட வாய்ப்புகளை பெற்று தந்தது. இப்போது அவரின் கையில் பல பெரிய படங்கள் இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இப்போது அஜித் நடித்து வரும் விடாமுயற்சி படத்திலும் அவர்தான் கதாநாயகி. அசர் பைசான் நாட்டில் நடந்த படப்பிடிப்பு முடிந்து இப்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராஜ் பிலிம் சிட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. எனவே, அஜித்தும், திரிஷாவும் அங்குதான் இருக்கிறார்கள்.
இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்திலும் திரிஷாதான் கதாநாயகியாம். இந்த படத்தின் படப்பிடிப்பும் இப்போது ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படத்திலும் அஜித் மாறி மாறி நடித்து வருகிறார். இரண்டு படத்திலும் திரிஷாவே கதாநாயகி என்பதால் பிரச்சனை இல்லாமல் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.