மிஸ்டர் சந்திரமௌலி மாதிரிதான் தனஞ்செயன்.. போற இடமெல்லாம் பூட்டு! ஆரம்பிச்சுட்டாங்க

by ராம் சுதன் |

கங்குவா படத்தின் எதிரொலி இன்னும் ஓய்ந்த பாடில்லை. அந்த அளவுக்கு படம் கடுமையான விமர்சனத்தை சந்தித்தது .படம் வெளியானதில் இருந்து ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்டுகள் படத்தை ஆக்கிரமித்துக் கொண்டது. யாரும் எதிர்பாராத ஒரு தோல்வி கங்குவா படத்திற்கு வந்தது.

ஆனால் இதற்கெல்லாம் காரணம் ஊடகங்கள் தான் என ஒரு படம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகுதான் அந்த படத்தை பற்றி விமர்சனம் செய்ய வேண்டும் என்ற ஒரு புதிய உத்தரவை இப்போது நீதிமன்றம் விடுத்து இருக்கிறது. இதற்கு வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய ஆதங்கத்தை தெரிவித்திருக்கிறார்.

அதாவது இதற்கு பின்னாடி ஒரு பெரிய அரசியலே இருக்கிறது என பிஸ்மி கூறினார். உதாரணமாக ஒரு மொக்க படத்தை ஆயிரம் பேர் சூப்பரா இருக்கிறது என எழுதுகிறார்கள் என்றால் அப்படிப்பட்ட மொக்க படத்தை ஒரு வெற்றி படமாக மாற்ற முடியாது. அதே மாதிரி ஒரு வெற்றி படத்தை மொக்க படம் என்று விமர்சனம் செய்தாலும் அந்த படம் தோல்வி படமாக மாறாது. இதுதான் அல்டிமேட்.

ஏனெனில் காசு கொடுத்து பார்க்கிறார்கள் அவர்கள் சொல்கிற விமர்சனத்தை வைத்து தான் youtubeபில் பத்திரிகையாளர்கள் எழுதுகிறார்கள்.இந்த சினிமாத்துறைக்கு ஊடகங்கள் பற்றிய பார்வை இப்போது வரை தவறாகவே இருக்கிறது. ஊடகங்கள் நினைத்தால் தான் ஒரு படம் ஓடும்.

ஊடகங்கள் நினைத்தால் ஒரு படத்தை பிளாப் பண்ண முடியும் என்று ஒரு தவறான கண்ணோட்டத்தை வைக்கிறார்கள். இங்கு இருக்கிற அந்த அடி முட்டாள்களின் ரியாக்ஷன்ஸ் தான் இது. இதற்கு ஒரு முக்கியமான காரணம் கங்குவா. கங்கவா படம் தோல்வி ஆனதற்கு காரணம் அந்த படத்தினுடைய கண்டன்டு தான்.

அது மக்களை ஏமாற்றுகிற கண்டன்ட்டாக அமைந்தது. இன்னொரு விஷயம் இதற்குள் ஒன்றுமே கிடையாது. ஆனால் ஒரு பெரிய வைரம் உள்ளே புதைந்திருக்கிறது. அந்த வைரத்தின் மதிப்பு பல கோடி என சொல்லி மக்களை ஏமாற்றி திறந்து பார்த்தால் அதில் ஒன்றுமே இல்லை .இதற்கு மக்களுடைய ரியாக்ஷன் தான் இந்த பிளாப்புக்கு காரணம்.

ஆனால் இவர்கள் என்ன நினைத்தார்கள் என்றால் ஊடகங்களின் ரிவ்யூ தான் காரணம் என இன்றைக்கு ஊடகங்களின் ரிவ்யூவையை தடை போடுகிற நிலைமைக்கு வந்து விட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் தனஞ்செயன். இவர் ஸ்டுடியோ கிரீனில் வேலை பார்க்கிறவர்.

அவர்களுடைய குட் புக்கில் இடம் பெற்று எப்படியாவது அவர்களுடைய கால்சீட்டை வாங்க வேண்டும் என்கிற கேரக்டர். இவர் எந்தெந்த நிறுவனங்களுக்கு போகிறாரோ அந்த நிறுவனத்துக்கு பூட்ட போட்டுருவாரு .இவருடைய ஃபார்முலா என்றைக்குமே வொர்க் அவுட் ஆகாது.

ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்த போதும் அவரே சொந்தமாக படத்தை தயாரிக்கும் போதும் அவரால் எந்த ஒரு வெற்றியும் கொடுக்க முடியவில்லை. தனஞ்ஜெயத்தின் சினிமா அறிவு என்பது மிஸ்டர் சந்திர மௌலி மாதிரியே ஆன ஒரு நிலைமைதான். இது எல்லாருக்குமே தெரியும்.

இப்படி எல்லாம் இருக்கும்போது கங்குவா படத்திற்கு இவர்கள் எல்லாம் ஊதி பெரிய பில்டப் கொடுத்து அந்த நிறுவனத்துக்கு ஆதரவாக தான் ஊடகங்களை பற்றியும் youtube பற்றியும் தவறுதலாக பேசிக்கொண்டு வருகிறார்கள் என பிஸ்மி கூறி இருக்கிறார்.

Next Story