கோட் படத்தின் 3வது பாடல்!.. அப்டேட்டு கொடுத்துட்டாரு வெங்கட்பிரபு... மரண வெயிட்டிங்!..
சென்னை 28 படம் மூலம் இயக்குனரான வெங்கட்பிரபு அதன்பின் சரோஜா, கோவா உள்ளிட்ட சில படங்களை இயக்கினார். அஜித்தை வைத்து வெங்கட்பிரபு இயக்கிய மங்காத்தா திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்ததால் முன்னணி நடிகர்களின் பார்வை வெங்கட்பிரபு பக்கம் திரும்பியது.
அப்படித்தான் சூர்யாவை வைத்து மாஸ், கார்த்தியை வைத்து பிரியாணி ஆகிய படங்களை எடுத்தார். இரண்டு படங்களுமே ஊத்திக்கொண்டது. மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படத்தை எடுக்க பல முயற்சிகள் செய்தார். ஆனால், அஜித் சம்மதிக்கவில்லை. அதன்பின் அஜித் - விஜய் என இருவரையும் வைத்து படமெடுக்க ஆசைப்பட்டார்.
அதுவும் நடக்கவிலை. எனவே, இப்போது விஜயை வைத்து கோட் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார் விஜய். மேலும், மகன் விஜயை ஹாலிவுட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையானவராக காட்டி இருக்கிறார் வெங்கட்பிரபு.
எனவே, இப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஏற்கனவே இப்படத்தின் 2 பாடல்கள் வெளியானது. அதில் முதல் பாடல் விஜய் பாடிய ‘விசில் போடு’ பாடலாகும். ஆனால், இந்த பாடல் விஜய் ரசிகர்களுக்கே பிடிக்கவில்லை.
எனவே, யுவனை எல்லோரும் திட்டி தீர்த்தனர். அதன்பின் 2வது பாடலாக ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் பவதாரிணியின் குரலை வைத்து அப்பாடலை உருவாக்கி இருந்தார் யுவன். ஆனால், அந்த பாடலும் ரசிகர்களை கவரவில்லை. எனவே, அடுத்து வெளியாகும் பாடலாவது நன்றாக இருக்குமா என்கிற ஏக்கத்துடன் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில்தான், ‘கோட் படத்தின் அடுத்த அப்டேட் 3வது பாடல்’ என டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் வெங்கட்பிரபு. இந்த பாடலை கமல்ஹாசனின் மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசன் பாடி இருக்கிறார். இவர் ஒரு பாடகியும் கூட. பல திரைப்படங்களில் பாடி இருக்கிறார். இந்த பாடல் எப்போது வெளியாகும் என்கிற அறிவிப்பை வெங்கட்பிரபு விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.