வேட்டையன் படத்துக்கு போன அல்வா கொடுத்துட்டாங்களே… இதுல நீங்களும் சிக்கிடாதீங்க!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:39  )

Vettaiyan: ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று திரைக்கு வந்த வேட்டையன் திரைப்படத்தால் ரசிகர்கள் சிலர் அதிர்ச்சி அடைந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.

திரையுலகம் வளர்ந்து கொண்டே இருப்பது போல அதன் ஊழலும் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. படங்களின் மீது ஆர்வம் கொண்டு ரசிகர்கள் படத்தை பார்க்க வரும்போது, அவர்களை ஏமாற்றுவதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர்.

விஜய் நடிப்பில் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரைக்கு வந்த கோட் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இருந்தும் படத்தின் முதல் நாள் காட்சியில் டிக்கெட் விலை எக்கச்சக்கமாக உயர்ந்திருந்தது. தயாரிப்பு தரப்பில் படத்தின் முதல் நாள் காட்சியை பெரிய தொகையில் விற்பனை செய்ய வேண்டும் என கூறப்பட்டதாக தகவல்கள் கசிந்தது.

அதுவே தமிழ் திரைப்பட ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது இதே போன்ற ஒரு விஷயம் வேட்டையன் திரைப்படத்திற்கும் நடந்துள்ளது. ரஜினி படம் என்பதால் பல இடங்களில் டிக்கெட் கிடைக்காமல் ரசிகர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

எப்படியாவது படத்தை பார்த்து விட வேண்டும் என அவர்கள் சமூக வலைத்தளம் மூலம் டிக்கெட் வாங்கலாம் என முடிவு செய்த சிலர் தெரியாதவர்களிடம் ஃபேஸ்புக் மூலம் வேட்டையன் டிக்கெட்டை வாங்கிக்கொண்டு திரையரங்குக்கு சென்றுள்ளனர்.

தாம்பரம் வெற்றி திரையரங்கு என டிக்கெட்டில் சீட் நம்பர் முதற்கொண்டு எல்லாமே இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இருந்தும் அந்த டிக்கெட் உடன் திரையரங்கில் சோதனையிட்ட போது தான் அது போலி என்பதை தெரிந்து கொண்டுள்ளனர். தற்போது இது போன்ற ஒரு கும்பல் வலம் வருவது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் அதிகாரப்பூர்வமற்ற அவர்களிடம் இருந்து டிக்கெட் வாங்குவதை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ரஜினியின் வேட்டையன் படத்திற்கு இதுபோல் நடந்துள்ளதால் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது..

Next Story