1. Home
  2. Cinema News

வேட்டையன் படத்துக்கே நோ சொன்ன சூப்பர் ஹீரோ… இந்த ரோலை விட்டுட்டாரே!...

வேட்டையன் திரைப்படம் நான்கு நாட்களில் 150 கோடி வசூல் செய்திருக்கிறது

Vettaiyan: ரஜினிகாந்த் நடிப்பில் சூப்பர் ஹிட் திரைப்படமாக திரையரங்குகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வேட்டையன் வாய்ப்பை பிரபல நடிகர் ஒருவர் மறுத்திருக்கும் சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

லைக்கா நிறுவனம் தயாரிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் வேட்டையன். இப்படத்தில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், ஃபகத் பாசில், ராணா டகுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்.

ரஜினியின் படத்திற்கு தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அனிருத் இசையமைத்து இருந்தார். இப்படம் அக்டோபர் 10ஆம் தேதி திரைக்கு வந்தது. திருடர்களுக்கு தயவு காட்டக்கூடாது என்ற போலீஸ் கெட்டப்பில் ரஜினிகாந்த் நடித்திருப்பார். மனித உரிமை ஆணையத்தின் நீதிபதியாக அமிதாப்பச்சன் நடித்து இருந்தார்.

ஞானவேல் படம் என்பதால் பிரபலங்கள் கதைக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டனர். கமர்சியல் படமாக இல்லாமல் மெசேஜுடன் இப்படம் வெளியானது. ரஜினிகாந்த் ரசிகர்களை தவிர குடும்ப ரசிகர்களுக்கு இப்படம் பெரிய அளவில் ஆர்வத்தை கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

இப்படத்தில் வில்லனாக ராணா நடித்திருக்கின்றார். ஆனால் பாகுபலி கொடூர வில்லனாக வந்த அவருக்கு இப்படம் சரியான வாய்ப்பை கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும். பெரிய அளவில் முக்கியத்துவம் இல்லாத அவருடைய கேரக்டர் ரசிகர் இடம் பெரிய அளவில் ஈர்ப்பை கொடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் நானியை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. ஆனால் தன்னுடைய பிசியான செட்யூலால் வேட்டையன் படத்தில் நடித்த நானி மறுத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இப்படத்தில் ராணா கேரக்டரில் தான் நானியை கேட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

கட்டுரையாளர்கள்

CineReporters Team

CineReporters Team

Editorial Team Member

info@cinereporters.com

உங்கள் நம்பிக்கைக்குரிய பொழுதுபோக்கு செய்தி, திரைப்பட விமர்சனம் மற்றும் பிரபலங்களின் அப்டேட்ஸுக்கான தளம். சினிமா உலகின் சமீபத்திய தகவல்களை உங்களுக்காக கொண்டு வருகிறது.