நான்தான் கிங்குன்னு காட்டிய அஜித்!.. விடாமுயற்சி படத்தின் பத்திக்கிச்சு பாடல் செம ரெக்கார்ட்!..

Vidaamuyarchi: கோலிவுட்டில் ஸ்டைலீஸ் நடிகராக வலம் வருபவர் அஜித். அமராவதி படத்தில் நடிக்க துவங்கி கடந்த 30 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறார். முதல் 10 வருடங்கள் மிகவும் கஷ்டப்பட்டு பல தோல்விப்படங்களையும் கொடுத்து ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாக மாறி பின்னர் மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.
சினிமாவில் நடிப்பது அஜித்துக்கு தொழில் என்றாலும் பைக்கில் பல ஊர்களுக்கும் போவது, கார் ரேசில் கலந்து கொள்வது, ரிமோட் ஹெலிகாப்டர், துப்பாக்கி சுடும் போட்டி என பல விளையாட்டுகளிலும் அவருக்கு ஆர்வம் அதிகம். சமீபத்தில் கூட துபாயில் நடந்த கார் ரேஸில் அஜித்தின் அணி கலந்து கொண்டு 3வது பரிசை வென்றது.
அஜித் கார் ரேஸ்: அந்த ரேஸை முடித்துவிட்டு யுரோப்பியன் கார் ரேஸில் கலந்துகொள்ள போய்விட்டார். ஒருபக்கம், அவரின் நடிப்பில் இரண்டு படங்கள் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. ஒன்று மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள விடாமுயற்சி. மற்றொன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி.
இதில் விடாமுயற்சி படம் ஏற்கனவே பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இப்படம் வெளியாகவில்லை. லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதே இதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. ஒருவழியாக பிப்ரவரி 6ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
விடாமுயற்சி பத்திகிச்சி: இந்த படத்தின் டிரெய்லர் வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான சவீதிகா பாடல் 2024 டிசம்பர் 24ம் தேதி வெளியானது. இந்நிலையில்தான், இந்த படத்தின் பத்திக்கிச்சு பாடல் ஒரு நாளுக்கு முன்பு வெளியானது.
இந்நிலையில், இந்த பாடல் யுடியூப்பில் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றிருக்கிறது. பத்திக்கிச்சி பாடலின் லிரிக் வீடியோவை இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து ரசித்திருக்கிறார்கள். இதைப்படகுழுவே மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்திருக்கிறார்கள். யுடியூப்பிலும் இந்த பாடல் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கிறது.