ஆசியாவில் வேணா நீங்க டாப்பா இருக்கலாம்… ஹாலிவுட் லெவலுக்கு தளபதிதான்…

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:43  )

Rajinikanth: தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் விஜய் இடையே தொடர்ச்சியாக போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. தற்போது இருவரும் சம்பளத்திலும் ஒருவரை ஒருவர் தொடர்ச்சியாக பல கோடிகளை தாண்டி விட்டனர்.

நடிகர் ரஜினிகாந்த் கோலிவுட் சூப்பர் ஸ்டார் என தற்போது வரையும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார். ஆனால் விஜய் 90களில் சினிமாக்கள் அடி எடுத்து வைத்தாலும் பல தோல்விகளை தாண்டி பல போராட்டத்திற்கு இடையே தன்னுடைய இடத்தை உருவாக்கியிருக்கிறார்.

சமீப காலமாக தான் விஜயின் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ரஜினிக்கு கூட கதையை பார்க்கும் ரசிகர்கள் விஜயை திரையில் பார்த்தால் மட்டுமே போதும் என்ற நிலையில் இருக்கின்றனர். இதனால் தான் விஜயின் திரைப்படங்கள் மோசமான விமர்சனத்தை குவித்தாலும் வசூலில் சக்கை போடு போடுகிறது.

ஆனால் ரஜினியின் திரைப்படங்கள் கதையில் சொதப்பினால் வசூலிலும் அதள பாதாளத்திற்கு சென்று விடுகிறது. இதனால் ரஜினியின் சம்பளம் அடிப்படும் என பேச்சுக்களும் எழுந்தது. ஆனால் தற்போது விஜயின் சம்பளத்தை கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் தன்னுடைய கூலி திரைப்படத்திற்காக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் 280 கோடி வரை சம்பளமாக வாங்கி இருக்கிறார். இதற்கு முன்னர் ஆசியாவிலேயே தங்கல் திரைப்படத்தில் அமீர்கான் 270 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார் என கூறப்படுகிறது. தற்போது இந்த தொகையை ரஜினிகாந்த் முறியடித்து ஆசியாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக மாறி இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் விஜய் தன்னுடைய தளபதி 69 திரைப்படத்திற்காக ஜிஎஸ்டி உடன் சேர்த்து 300 கோடி வரை பெற்று இருப்பதாகவும் கூறப்படுகிறது. அயன் மேன் திரைப்படத்திற்காக ராபர்ட் டவுனி ஜூனியர் சம்பளத்தினை விட இது அதிகம். இந்த கணக்கு உண்மையாகும் பட்சத்தில் ரஜினியின் சம்பளத்தை விஜய் முறியடித்து முதல் நடிகராக இருக்கவும் வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story