அரசியல்வாதினு சொன்னாங்க! ‘தளபதி 69’ல் விஜயின் கேரக்டர் இதுதானா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:07  )

தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது தளபதி 69 படத்தில் பிஸியாக இருந்து வருகிறார். அதற்கான பூஜை சமீபத்தில்தான் போடப்பட்டது. அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான கோட் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. வசூலிலும் போதுமான சாதனையை பெற்றது. அடுத்ததாக அவருடைய 69வது படத்தை எச்.வினோத்தான் இயக்குகிறார்.

அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. எச்.வினோத்தை பொறுத்தவரைக்கும் விஜயை வைத்து ஒரு பக்கா அரசியல் படத்தைத்தான் எடுப்பேன் என்று கூறியிருந்தார். அதுவும் அந்தப் படத்தில் விஜய் ஒரு அரசியல்வாதியாகத்தான் வருவார் என்று பலரும் பல கருத்துக்களை கூறி வந்தனர்.

ஏனெனில் இந்தப் படத்திற்கு பிறகு விஜய் சினிமாவிற்கு ஃபுல் ஸ்டாப் வைத்துவிட்டு முழு முச்சாக அரசியலில் இறங்குவதால் இந்தப் படத்தில் ஒரு அரசியல் வாதியாக நடிப்பார் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் தளபதி 69 படத்தில் விஜயின் கேரக்டர் பற்றி ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.

எப்பவும் போல இந்தப் படத்திலும் விஜய் ஒரு போலீஸாகத்தான் வர இருக்கிறாராம். அதுவும் காவல்துறையில் ஏதோ ஒரு விதத்தில் தவறு செய்ய பணியிலிருந்து விஜய் விலகி இருக்கும் கேரக்டரில் நடிக்க இருக்கிறாராம். ஏற்கனவே இந்த மாதிரியான கதாபாத்திரங்களை பல படங்களில் பார்த்திருக்கிறோம்.

அதைப் போலத்தான் தளபதி 69 படத்திலும் விஜயின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதன் பிறகு ஒரு வேளை அரசியல் சார்ந்த விஷயங்களில் அவருடைய கதாபாத்திரம் மாறலாம் என்றும் தெரிகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே மற்றும் மமீதா பைஜூ ஆகியோர் நடிக்கிறார்கள்.

இதற்கு முன் சமந்தா மற்றும் சிம்ரன் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில் பட பூஜை சமயத்தில்தான் ஹீரோயின்களின் விவரம் அதிகாரப்பூர்வமாக தெரிய ஆரம்பித்தது.

Next Story