தளபதி69 கடைசி இல்லையா? கதை சொல்லி இருக்கேன்… ரகசியம் பகிர்ந்த பிரபல இயக்குனர்..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:25  )

Thalapathy: தளபதி விஜயின் சினிமா வாழ்க்கையில் கடைசி அத்தியாயம் என கவலையில் ரசிகர்கள் இருக்கும்போது அவர்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயமும் வெளியாகி இருக்கிறது.

நடிகர் விஜய் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் இருந்து விலகுவதாக ரசிகர்கள் ஏற்கனவே கவலையில் இருக்கின்றனர். அவர் ஒப்புக்கொண்டது போல தளபதி69ஐ முடித்துவிட்டு முழுமையாக அரசியல் பணியில் ஈடுபட இருக்கிறார்.

இதனால் அவருடைய தளபதி69 அறிவிப்புகள் ரசிகர்களிடம் பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தினை கேவிஎன் நிறுவனம் தயாரித்து வருகிறது. பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளனர்.

இப்படம் முடிந்த கையோடு விஜய் அரசியலுக்கு செல்ல இருக்கிறார். இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் வரலாம். இல்லாமலும் போகலாம் என ரசிகர்கள் கவலையில் உள்ளனர். இதனால் விஜய் நடிக்க வேண்டிய இயக்குனர்களின் பட்டியல் ரசிகர்களிடம் நீண்டுக் கொண்டே உள்ளது.

அந்த லிஸ்ட்டில் முக்கிய இடம் சிறுத்தை சிவாவிற்கு தான். இவர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர். வீரம், விவேகம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கி வெற்றி கண்டவர். அஜித்தை விடுத்து தற்போது சிறுத்தை சிவா கங்குவா படத்தினை இயக்கி இருக்கிறார்.

இந்நிலையில் சிவாவிடம் விஜயுடன் பணிபுரிந்து இருக்கீங்களா எனக் கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்தவர் நான் விஜய் சாருக்கும் கதை சொல்லி இருக்கேன். கிராமத்து கதையாக சொல்லி இருந்தாலும் அது சரியாக நேரம் அமையாததால் நடக்கவில்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.

அப்போ கண்டிப்பா விரைவில் மீண்டும் கோலிவுட்டிற்கு வந்தால் சிறுத்தை சிவாவுடன் இணையவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Next Story