Jananayagan: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் ஜனநாயகன். விஜய் அரசியலில் இறங்கிவிட்ட நிலையில் இதுவே அவரின் கடைசிப்படமாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், 2026 சட்டமன்ற தேர்தலில் தனது கட்சிக்கு எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை என்றால் அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பார் என சிலர் சொல்கிறார்கள்.

ஜனநாயகன் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து அசத்தலான வெற்றியை பெற்ற பகவந்த் கேசரி படத்தின் தமிழ் ரீமேக் என சொல்கிறார்கள். இந்த படத்தின் ரீமேக் உரிமையையும் ஜனநாயகன் படத்தின் தயாரிக்கும் கே.வி.என் புரடெக்‌ஷன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வாங்கி இருக்கிறது. அதேநேரம் தமிழுக்கு ஏற்றது போல கதை, திரைக்கதையில் சில மாற்றங்களை செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக விஜய் அரசியலுக்கு வந்துவிட்ட நிலையில் அரசியல் தொடர்பான பல முக்கிய காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது

ஜனநாயகன் திரைப்படம் 2026 பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி வெளியாகவுள்ளதால் இந்த படத்தின் வியாபாரம் தற்போது சூடு பிடிக்க துவங்கியிருக்கிறது. ஜனநாயகனை தமிழ்நாட்டில் வெளியிடும் உரிமையை வாங்க பலரும் போட்டி போட்டனர். ஆனால் அதில் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் வெற்றி பெற்றிருக்கிறார். இந்த ரோமியோ பிக்சர்ஸ் ராகுல்தான் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்கவுள்ள புதிய படத்தின் தயாரிப்பாளர் என்பது கூடுதல் தகவல்.

தமிழ்நாடு மற்றும் கேரள இரண்டு உரிமைகளையும் சேர்த்து 115 கோடிக்கு வாங்கி இருக்கிறார் ராகுல். இதில் முக்கிய விஷயம் என்னவெனில் விஜயின் மேனேஜரும், அவருக்கு மிகவும் நெருக்கமானவருமான ஜெகதீஷும் இதில் சைலன்ட் பார்ட்னர் என்கிறார்கள். அதாவது ஜனநாயகன் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதில் உள்ள லாப, நஷ்ட கணக்கு இரண்டும் ராகுலுக்கும், ஜெகதீசுக்குமே சேரும்.

ஜெகதீஷ் கிட்டத்தட்ட விஜயின் பினாமி என்பதால் இதற்குள்ளே விஜய்தான் இருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ‘இதில் இரண்டு விஷயங்கள் இருக்கிறது. ஒன்று லாபத்தில் பங்கு.. இரண்டாவது ஜெகதீஸ் இதற்குள்ளே இருப்பதால் கணக்கு வழக்குகளை யாரும் தவறாக காட்ட முடியாது… விஜய் உஷாராக செய்திருக்கிறார்’ என்கிறார்கள்.

115 கோடி கொடுத்து தமிழ்நாடு, கேரள உரிமையை வாங்கி இருக்கும் நிலையில் 225 கோடி வரை வசூல் செய்தால் மட்டுமே ஜனநாயகன் படம் அவர்களுக்கு லாபத்தை கொடுக்கும் என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *