நடிகையின் ஆசையை நிறைவேற்றிய விஜய்சேதுபதி! சும்மா அடிச்சு துவம்சம் பண்ணிருவாங்களே
நடிகர் விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் தான் விஜய் சேதுபதி நடித்து மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்றது.அதுவும் விஜய் சேதுபதிக்கு அவருடைய ஐம்பதாவது படமான இந்த மகாராஜா திரைப்படத்தை நித்திரன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.
படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட இந்த படம் 100 கோடியை தொட்டு விட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி அடுத்ததாக ஏஸ் சென்ற திரைப்படத்தில் நடித்து வருவதாகவும் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது.
இந்த நிலையில் தான் விஜய் சேதுபதியின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி இருக்கிறது. அதாவது விஜய் சேதுபதியின் அடுத்த படத்தை இயக்குனர் பாண்டிராஜ் இயக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியானது. இந்த படத்தில் தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருவருமே நடிப்பில் சளைத்தவர்கள் இல்லை என அனைவருக்கும் தெரியும். நித்யா மேனன் சினிமா வாழ்க்கையை பார்க்கும் பொழுது அவர் நடித்த ஒவ்வொரு படங்களுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதப்படும். அந்த வகையில் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாபாத்திரங்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டவையாகத்தான் இருக்கும்.
இந்த நிலையில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக இவர் நடிக்கிறார் என தெரிந்ததும் ரசிகர்கள் இடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் மலையாளத்தில் 19 (1 )(ஏ)என்கிற திரைப்படத்தில் நித்யா மேனன் நடித்திருந்தார்.
அப்போதே விஜய் சேதுபதியிடம் நித்யா மேனன் 'உங்களுடன் இணைந்து நான் நடிக்க ஆசைப்படுகிறேன்' என கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதனால் இவருடைய ஆசையை இந்த படத்தின் மூலம் விஜய் சேதுபதி நிறைவேற்றி இருக்கிறார் என கோடம்பாக்கத்தில் பேசி வருகிறார்கள்.